பக்கம் எண் :

தம

 

       காப்புப் பருவம்

173

தம் பெற்றோர்களையும், உற்றார்களையும் வெட்டி வீழ்த்தினார்.  ஒரு சிறு குழந்தையையும் வெட்டத் துணிந்தபோது, வாயில் காவலன் தடுத்தான். “  “ இது நெல்லையுண்டவள் பாலைக் குடித்தமையின் இதனையும் வெட்டுதல் தக்கது “  என அதனையும் வெட்டினார்.  இத்தகைய வீரச் செயல் புரிந்த இவர் சிவன் அருளுக்குப் பாத்திரம் ஆனார்.

    இந்நாயனார் தம் மன்னனது பகைவருடன் பொருது வெற்றி கொண்டதால், வயம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டார்.  இவரைச் சேக்கிழார்  “ தனி வீரராம் தலைவர் “  என்றும் “ வேற்றுப்புலம் பெருகத்துயர் விளைப்பப் போர் விளைத்துப் புகழ் விளைப்பார் “  என்றும் கூறியுள்ளனர்.  மேலும், இந்நாயனார் வேளாளர் மரபில் புலிபோலத் துலங்கினமையின்,  “ வேட்புலி எனும் கோட்புலி “  எனப்பட்டார்.  இவர் அக்குடியில் சிறந்து விளங்கியதால், சேக்கிழார்,  “ நாட்டியத்தான் குடி வேளாண் குலம் பெருக வந்துதித்தார் “  என்கிறார்.  மற்றும் இவர் தம் உறவினர்களை வெட்டி வீழ்த்தியும் கூட இறைவன் இவரை  விரும்பி, அன்பர் எதிர் வெளியே நின்று, “உன்னுடைய கைவாளால் உறுபாசம் அறுத்த கிளை பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் புகழோய் நீ இந்நிலை நம் உடன் அணைக “  என்று கூறி இருப்பதால், இவர் வேட்புலி என்று சிறப்பித்தற்கும் உரியர் ஆயினார்.  திரு என்னும் சொல், “கண்டரால் விரும்பப்படும் தன்மை “  என்று பொருள் படுதலின், இவர் உறவினர்களைத் தடித்த நிலையிலும், எவராலும் விரும்பப்படுபவரே என்ற கருத்தில் திருக்கோட்புலி எனப்பட்டார்.

    சேக்கிழார்,  “ சிங்கர் கழலிணை தொழுது போற்றி, என்றும், இடங்கழியார் கழல் வணங்கி என்றும், “ செருத்துணையார் தூயகழல் இறைஞ்சி “ என்றும், புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி என்றும், கோட்புலியார்அடி வணங்கி “  என்றும் வணங்கி இருத்தலின், அம்மரபுபடி திரு பிள்ளை அவர்களும்  “ ஐவரையும் மேல்மேலும் ஏத்தெடுப்பாம் “  என்றனர்.                                                                                  

(9)