இ
இரு-இரண்டு, பைங்கோதையர்-பசிய
மாலையை அணந்த பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்னும் இரண்டு மாதர்களை, வேட்ட-திருமணம்
செய்துகொண்ட, பான்மை-முறைமை, இணங்க-பொருந்த, ஓர்-ஒப்பற்ற சிங்கடிவனப்பகை எனும் இரு பெண்கள்,
பயலாமல்-பெற்றெடுக்காமல், பயந்த-பெற்றெடுத்த, தொண்டர்-சுந்தரர், எழுவகையுளார்-பத்தராய்ப்
பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே சேர்த்தார், திருவாரூர்ப் பிறந்தார்,
முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார், பொன்-அழகிய,
ஏத்தெடுத்தல்-போற்றுதல்.
விளக்கம் இறைவர்
பிறப்பு இறப்பு அற்றவர். பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலம்பில் குறிக்கப்பட்டவர்.
“பிறப்பிலார், இறப்பிலார் பிணை ஒன்று இல்லார்,“ “ ஈறிலாத ஈசன் “ “ இறப்பொடு பிறப்பிலானை,
என்று திரு முறைகளும் கூறுகின்றன. விநாயகர் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருப்பதற்குரிய காரணம்
இன்னது என்பதைக் காளமேகம் குறிப்பிடும்போது
“ தந்தை பிறந்திறவாத்
தன்மையான் தன்மாமன்
வந்துபிறக்கும்
வன்மையினால் முந்தொருநாள்
வீணுக்கு வேளை எரித்தான்
மகன்மாமன்
சாணிக்கு வந்திருந்தான்
காண் “
என்று பாடிய பாட்டும்
சிவபெருமான் இறவாதவன் என்பதைக் காட்டும்.
இதனால்தான் ஈண்டு
“ நித்தராய்” எனப்பட்டார். இறைவர் என்றும் தில்லையில் நடனம் புரிபவர். இவர் நடனம்
புரிந்திலரேல், உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைததல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள்
நடைபெறா : மக்களை ஆனந்த வரநிதியில் திளைக்கச் செய்யவே இறைவர் நடனம் புரிகின்றனர்.
இதனை முறையே.
|