பக்கம் எண் :

பன

 

       சிற்றில் பருவம்

627

பன்மணியும் நிதிக்குவையும்
    பகட்டினமும் பரித்தொகையும்
இன்னஎண் ணிலகவர்ந்தே
    இகலரசன் முன்கொணர்ந்தார்

என்ற பாடல் உளது.

    மன்னவன் ஆவான் ஈண்டு நரசிம்ம வர்ம பல்லவன்.  அவனுக்காகச் சிறுத்தொண்டர் (போருக்குச் சென்ற போது அவரது திருப்பெயர் பரஞ்சோதி என்பது) வாதாபி நகரத்திற்குப் படை திரட்டிச் சென்றனர். வாதாபி நகரம் அதுபோது இரண்டாம் புலிகேசியின் ஆளுகையில் இருந்தது.  அவனைப் பரஞ்சோதியார் வென்றார்.  இக்குறிப்பே இப்பாட்டில் உள்ளது.  இதனைச் சாளுக்கிய பட்டயங்களே குறித்துள்ளன.

    நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணத்துள்,

ஆயஅர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வர்எதிர் நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம்
காயமதக் களிற்றின்நிரை பரப்பிஅமர் கடக்கின்றார்

என்ற நெல்வேலிப் போர் குறிப்புக் காணப்படுகிறது.

    இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன் என்னும் சாளுக்கியன்.  இவனே நெடுமாற நாயனாருடன் போரிட்டவன்.  இறுதியில் நாயனாரே வென்றார்.  இதனைச் சேக்கிழார், “பஞ்சவனார் படைக்குடைந்து முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னன் படை சரியப் புனையும் நறும் தொடைவாகை பூழியர் வேம்புடன் புனைந்து” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இப்போர் நடந்தது நெல்வேலி என்னும் இடமாகும்.  இதற்குச் சோழ மண்டலத்துத் தென்கரைப் பனையூர் நாட்டு நெல்வேலி என்று கல் வெட்டுக் குறிப்பிடும் சான்றும் உளது.

    நெடுமாறன் நெல்வேலியில் வெற்றி கொண்டதைச் சுந்தரரும், “நிறைக்கொண்ட சிந்தையால், நெல்வேலி