என
என்று குறிப்பிட்டுள்ளனர்.
“திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்‘ என்று கூறியுள்ளதைக் காண்க.
முப்போதும் திருமேனிதீண்டுவார் ஆவார் சிவவேதிகர்கள். இவர்கள் இறைவனைக் காலை மாலை நண்பகல்,
ஆகிய மூன்று காலங்களிலும் தொட்டுப் பூசை செய்யும் புனிதர்கள். முப்போதும் என்பது சென்ற காலத்தினும்,
நிகழ் காலத்திலும், வருங்காலத்திலும் பூசித்து, பூசிக்கின்ற பூசிக்கும் பேறு பெற்றவர்கள் என்றும்
சேக்கிழார் இவர்களைப் புகழ்கின்றனர். நம்பியாண்டார் காலை, பகல், மாலை என்ற மூன்று வேலைகளில்
பூசிப்பவர் என்று குறித்துச் சென்றனர்.
முழுநீறு பூசிய
முனிவர்கள்
என்பவர்கள் திருநீற்றையே
சிவபெருமானாகக் கொண்டு அதனை உடல் முழுதும் பூசிப்பூரிப்பவர்கள். பூசும் நீறுபோல் உள்ளமும்
தூய்மையர். இங்ஙனம் நீற்றைப் பூசியதனால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அறுத்தவர்கள்.
இத்தொகை அடியார்களைத் திருவாரூர் அடியார்களாக நம்பியாண்டார் நம்பிகள் கூறியுள்ளனர். “ ஆரூர்
அமர்ந்த அரனடிக் கீழ் இலகு வெண்ணீறும் தம் மேனிக் கணியும் இறைவர்களே “ என்பது அவரது
வாக்கு. சேக்கிழார் பொதுப்பட, “ புவியதனின் உடையானைப் போற்றி நீற்றை ஆதிவருமும்மலமும்
அறுத்த வாய்ம்மை அருமுனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே “ என்றருளியுள்ளார். நம்பியாண்டார்
கருத்துக்கு இயைந்த அடியும் சேக்கிழார் வாக்கில் உண்டு. அஃது, “ அம்பலத்தே உலகுய்ய ஆடும்
அண்ணல் உவந்தாடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் என்பது.
அப்பாலும் அடிச்சார்ந்தார்
என்பவர்கள் சுந்தரர் காலத்துக்கு முன்பு இருந்தவர்களும், அவர் காலத்தில் இருந்தவர்களும் ஆகிய
அடியார்களே அன்றி, அவர் காலத்திற்குப் பிறகு இறைவனடி உற்ற எல்லா அடியார்களும் ஆவார். சேக்கிழார்
இவர்கள் யார் என்பதைக் கூறும்போது,
|