பன
பன்னியதொ கையும்வகையும்
முதல்ஆத லான்முதற்
பகர்சைவ
ரேஅருளினார்
பரிவுவிரி இறுதிஆ
தலின்இறுதி யார்எனப்
படுசைவ
ரேஅருளினார்
துன்னிய பொருத்தம்
இது
என்று பாடிக் காட்டினர்.
ஆதி எவ்வளவு சிறப்புடையதோ
அவ்வளவு சிறப்புடையது அந்தம் என்ற அரிய குறிப்பைத் திரு பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருப்பதையும்
நுண்ணிதின் உணர்தல் வேண்டும். “ அந்தம் ஆதி என்பனார் புலவர் “ என்பது சித்தாந்தநூல்
கருத்தன்றோ? இது “ துன்னிய பொருத்தம் இது “ என்ற தொடரில் தொனிப்பதைக் காண்க.
மேலும், இங்குக் கூறப்பட்ட கருத்தினால் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்கள் நால்வரும் நாட்டுச்
சமுதாய நன்மைக்குத் தமக்குள் வேறு பாடோ, உயர்வு தாழ்வோ இன்றி அரிய செயல் புரிதற்கு உரியவர்
ஆவார். சைவத்தைப் போற்றுதலில் வேளாளர் சிறந்தவர் ஆதலின், சைவர் எனப்பட்டனர்.
திருத்தொண்டத்
தொகை மிக்க சிறப்புடையது என்ற காரணத்தினால்தான் “ பன்னிய தொகை “ எனப்பட்டது. இந்த
உண்மையினைச் சேக்கிழார், “ தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் “
என்று போற்றியுள்ளதால் தெளியலாம். சேக்கிழார் விரிநூல் பாடுதற்குச் சுந்தரர் நூலும், நம்பி
அவர்களின் வகை நூலும் துணையாக அமைந்தன என்பதை,
மற்றி தற்குப்
பதிகம்வன் தொண்டர்தம்
புற்றி டத்தெம்
புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத்
தொண்டத் தொகைஎனப்
பெற்ற நற்பதி
கம்தொழப் பெற்றதாம்
அந்த மெய்ப்பதி
கத்தடி யார்களை
நந்தம் நாதனாம்
நம்பிஆண் டார்நம்பி
புந்தி ஆரப்
புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல்
இயம்புவாம்.
என்று கூறியுள்ளதைக் காண்க.
|