பக்கம் எண் :

2

                              பாயிரம்

ராசப் பெருமான் நடனம் புரியும் சபை, இறைவர்-நடராசர், மேனி-அசரீரி, இணங்கு-பொருத்தம், உற-பொருந்த, மறை-வேதவாக்கியம், ஆதியா-முதலா, அருளும் இயல்பு-திருவருள் திறம், நாம்-பெருமை, அம்முதல்-இறைவர் எடுத்துக் கொடுத்த உலகெலாம் என்னும் அம்முதல், நெறி-வழி, வான்-ஆகாயம், வாய்க்கடை-கடைவாய், மருப்பு-யானைத் தந்தம், பாமேவு-பரவி இருக்கின்ற, சிறப்பித்துக் கூறப்படுகின்ற, உதரபந்தம்-வயிற்றில் கட்டப்பட்ட பட்டை, அரை-இடை, படாம்-ஆடை, கழல்-வீரத் தண்டை, விரவ-கலந்து பொருந்த, பண்ணவனை-விநாயகனாம் தேவனை, அஞ்சலிப்பாம்-கைகூப்பித் தொழுவாம்.

    [விளக்கம்] :  ஏமம் என்னும் சொல் ஏம் என கடைக் குறைந்து நின்றது.  தில்லைக் கூத்தப்பெருமான் நடன சபை பொன்னோடு வேய்ந்திருக்கும் காரணத்தால், “ஏம்மேவு ஞானசபை“ எனப்பட்டது.

    எந்நூல் செய்யினும் அந்நூற்குப் பாயிரம் அமைய வேண்டுவது மரபு.  இதனை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர்,

    “எந்நூல் உரைப்பினும், அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம், என்னை ? 

    ஆயிரம் முகத்தால் அகன்ற தாயினும்
    பாயிரம் இல்லது பனுவல் அன்றே

என்றார் ஆதலின்“  என்று கூறி யுள்ளனர்.  இந்த அளவிலும் அவர் நிறுத்திலர்.  பாயிரத்தின் இன்றி அமையாமையினை,

    “பாயிரம் என்றது, புறவுரையை.  நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கில் கொழுச்சென்றவழித் துன் ஊசி இனிது செல்லுமாறு போல, அந்நூல் இனிது விளங்குதலின் புறவுரை கேட்டல் வேண்டும் :  என்னை ?

    பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு
    நுண்பொருட்டாகிய நூல்இனிது விளங்கும். “

என்றார்.