| 
ச
 
சிறப்பாக நடந்து 
வருகிறது.  இக்குன்றுகள் பழம்பெருங்குன்றுகள் என்ற காரணத்தால் அரசாங்கத்தாரைச் சார்ந்த 
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சில இடங்களை அகழ்ந்து பல பழம்பொருள்களைக் கண்டெடுத்துச் சென்னைப் 
பொருட்காட்சிச் சாலையில், “ இவை குன்றத்தூரில் எடுக்கப் பட்டவை” என்ற குறிப்புடன் வைத்துள்ளனர். 
    சேக்கிழார் 
பெருமான் பிறந்த இல்லம் இதுபோது திருக்கோயிலாகத் திகழ்கிறது.  இங்கும் சேக்கிழார் திரு 
நட்சத்திரத்தின்போது பத்துநாள் விழா சிறப்பாக நடந்து வருகிறது.  இங்குச் சேக்கிழார் மரபினரும், 
ஏனைய வேளாள மரபினரும் வாழ்ந்து வருகின்றனர். சைவ வைணவக் கோவில்கள் பழுதுபட்ட நிலையில் உள்ளன.  
இங்குக் கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன.  இங்குச் சேக்கிழார் பெயரால் ஒரு திருமடம் உளது.  
சேக்கிழார் திரு நட்சத்திரத்தில் திருப்பனந்தாள் அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருள்நந்தித்தம்பிரான் 
சுவாமிகள் மகேஸ்வர பூஜையை மிகச் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்துள்ளனர்.  அன்று காலைமுதல் 
மாலைவரை சிறந்த முறையில் அன்னம் பாலிப்பினை அவர்கள் நடத்தி வருகின்றனர். 
    இங்குச் செம்பரம்பாக்கம் 
ஏரிப் பாய்ச்சல் காரணமாகப் பயிர்கள் செழித்து வளர்கின்றன.  இயற்றைக் காட்சி எழிலுடன் 
விள்ங்குகின்றது.  ஒரு சிற்றோடையும் இவ்வூர் வழியே செல்கிறது. 
    இந்தக் 
குருவணக்கச் செய்யுள், சிலேடை அணியினைக் கொண்டது.  சேக்கிழார் முருகப்பெருமானாகவும், விநாயகப் 
பெருமானாகவும், சிவ பெருமானாகவும் திகழ்கிறார் என்பதைச் சொற் சித்திரங்களில் வைத்துப் 
பிள்ளை அவர்கள் பாடியுள்ளார். 
    சேக்கிழார் 
வேளாள மரபினர்.  ஆகவே, அவர் ஏர் வளம் உடையவர்.  மேலும், அவர் பெருமையில் மேல் ஆகி 
இருப்பவர்.  இவற்றைச் சிடையில் ஏர்வளம் என்பதை அழகு வளம் கொண்டு என்றும், பெரும் மையில்மேல் 
ஆகி என்னும் பொருளில் சேக்கிழாரை முருகனாகவும் காட்டினார். 
 |