பக்கம் எண் :

212

             செங்கீரைப் பருவம்

பகுதியையும் தன் அகத்தே கொண்டது.  தொண்டை நாட்டின் பழம் பெயர் குறும்பர் நிலம் என்பது.  குறும்பர் ஒருவகை மரபினர்.  ஆடு, மாடு மேய்த்து வாழ்பவர்.  இவர்களை ஆதொண்ட சக்ரவர்த்தி வென்று அவர்கள் நாட்டைக் கைப்பற்றினன்.  அது முதல் அவன் பெயரால் தொண்டைநாடு என்று வழங்கப்பட்டது.  நாகர் மகளுக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த இளந்திரியன் என்பவன் குழந்தைப் பருவத்தில் தொண்டன் கொடியால் சுற்றப்பட்டவன்.  அவன் ஆண்டதால் தொண்டை நாடு என்ற பெயர் பெற்றதாகவும் கூறுவர்.                                             

(12)

2.    பொருவரிய தொண்டர்கள் புராணத்துள் இறையருள்
        பொலிவான் நிரம்புசொற்கள்
    போற்றிடு விருப்பநீர் நம்மைமழ வாக்கிவாய்
        புகல்குதலை மழலைஎன்ன
    மருவுமொழி ஆசையுற் றீர்பயன் உறாதென்ன
        வள்ளால் மறுத்துரைத்தால்
    வார்த்தைப் பயன்கொள வலேம்தக்க சான்றுநீ
        வாய்மலர் புராணம்நின்றும்
    ஒருவரிய தாம்செப்பல் உற்றபொருள் என்றகவி
        ஓதவேண் டுவதினிஎவன்
    உனதுசொல் பயன்உணர்தல் இலம்என்னின் மழவா
        உவப்பதும் பொய்ம்மையாமே
    திருவமிகு குன்றையம் பதியருள் மொழித்தேவ
        செங்கீரை ஆடியருளே
    திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக
        செங்கீரை ஆடியருளே

    (அ. சொ) பொருவு அரிய-ஒப்புக் காண்பதற்கு அருமையான, இறை-இறைவனது, பொலி-விளங்கும், வான் நிரம்பு