| 
ந
 
    நாடெங்கும் சோழன்முனம் 
தெரிந்தே ஏற்றும்  
        நற்குடிநாற் 
பத்ெ்தண்ணா யிரத்து வந்த 
    கூடல்கிழான் 
புரிசைகிழான் குலவு சீர்வெண் 
        குளப்பாக்கி 
ழான்வரிசைக் குளத்து ழான்முன் 
    தேடுபுக 
ழார்இவரும் சிறந்து வாழச் 
        சேக்கிழார் 
குடியில்இந்தத் தேசம் உய்யப்  
    பாடல்புரி 
அருண்மொழித்தே வரும்பின் நந்தம் 
        பாலறா 
வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் 
என்று குறிப்பிடுதல் காண்க.  
சேக்கிழார் என்பது, சே+கிழார் எனப் பிரிக்கப்பட்டு, ரிஷபத்துக்கு (சேவிற்கு) உரியவராகிய 
(கிழார்) சிவபெருமான் என்று பொருள் தருதற்கும் இடமாய் இருத்தலின், சிவபெருமானையும் போன்றவர் 
சேக்கிழார் என்று கூறிய நயத்தைக் காண்க. 
    அருண்மொழித்தேவர் 
என்பது சேச்கிழாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்.  பெற்றோர்கள் ராஜராஜ சோழனிடம் அன்புடையவர்கள் 
என்றும், அவனது பெயர்களுள் ஒன்றான அருண்மொழித்தேவன் என்பதை இவருக்கு இட்டனர் என்றும் கூறுவர்.  
ஆனால், சேக்கிழார், திருத் தொண்டர் புராணத்தைத் தெய்வத்திருவருள் மொழிகளைக் கொண்டு திகழும் 
முறையில் பாடியவர் என்ற காரணத்தால் அறிஞர்கள் இவ்வாறு பெயர் இட்டு அழைத்தனர் என்று கூறினும்  
அமையும். சிவனடியார்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புக்களே சுந்தரர் திருத்தொண்ட தொகையிலும், 
நம்பி ஆண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திரு அந்தாதியிலும் இருந்தமையின், அவற்றை விரித்து 
ஒரு பெரு நூலாகச் சேக்கிழார் செய்தமையின், “    புராணம் விரித்துரைத்தான்” எனப்பட்டது,” 
    உமாபதிசிவம் 
சேக்கிழார் பற்றி ஒரு புராணமே பாடி இருக்க, நான் ஒரு பி்ள்ளைத் தமிழ் அவர் மீது பாடுவது, அறிஞர்கள் 
என்னைக் குறித்து நகையாடுதற்கே ஆகும் என்று அவையடக்கம் பாடியிருப்பது, திரு பிள்ளை அவர்களின் 
பண்பைப் புலப்படுத்துகிறது. 
 |