| 
New Page 1
 
மொழியிலும் மறைகள் 
இருந்தன என்பதில் எள்ளளவும் ஐயம் இன்று.  தமிழில் மறைகள் இருந்தன என்பதற்குச் சான்றாகப் 
பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. 
    பாட்டுரை நூலே 
வாய்மொழி பிசியே 
    மறைமொழி கிளந்த 
மந்திரத் தான  
    நிறைமொழி மாந்தர் 
ஆணையில் கிளந்த 
    மறைமொழி தானே 
மந்திரம் என்ப 
என்ற ஒல்காப் 
பெருமைத் தொல்காப்பியர் வாக்கையுணர்க. இவரது அடியை ஒட்டி வள்ளுவப் பெருந்தகையார். 
    நிறைமொழி மாந்தர் 
பெருமை நிலத்து 
    மறைமொழி காட்டி 
விடும் 
என்று கூறியதையும் காண்க. 
    இவ்விரு பண்டைய 
பெருமக்கள் தமிழில் நூல் செய்கின்றார்கள் ஆதலின், தமிழர்களின் பண்பாட்டையும் ஒழுக்க முறைகளையும் 
விளக்குகின்றார்கள் ஆதலின், அவர்கள் குறிப்பிடும் மறை என்னும் சொல், தமிழர்கட்குரிய 
மறைகளையே உணர்த்தும் என்று கூற வேண்டா அன்றோ? மேலும், தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் 
நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு என்ற இடத்து வரும் நான்மறை என்பது தமிழ் மறையையே என்க.  
நான்மறையாவது அறம், பொருள் இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களைப் பயக்கும் மறையே ஆகும்.  
ஏலாதி என்னும் பதினெண் கீழக்கணக்கு நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் வரும் நான்மறை என்னும் 
தொடர்க்கு இங்ஙனமே பொருள் காணப்பட்டுள்ளது.  வடமொழியாளர்கட்குரிய வேதம் நான்கு ஆனது 
பிற்பட்ட காலத்தே என்க. அவர்கட்கு உரிய ஆதி வேதம் ஒன்றே.  அதுவே இருக் வேதம் என்பது.  
வரலாற்றுப் புலமையில் சிறந்து விளங்கும் பேராசிரியர்  K.N. நீலகண்ட சாஸ்திரியார் எம். ஏ. 
அவர்கள்  The 
hymns of the Rig  Veda are the earliest historical documents of the Indian 
Aryans 
 |