பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

229

அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்தவருக்கு அருளுமது எனக்கறிய இயம்பேடி
அரும்தவருக்கு அறம் முதல்நான்கு அன்றருளிச் செய்தில
                                            னேல்
இருந்தவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ

என்ற திருப்பாடலைக் காண்க.

    தேவாரத்திலும் இவ்வாறு இந்நான்மறைப்பெருளைச் சனகாதியர்கட்கு உபதேசம் செய்ததை முதல் திருமுறை திருமுதுகுன்ற பதிகத்தில்,  “ அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்ப வீடு மொழிந்தவாயான் முக்கணாதிமேய முதுகுன்றே ‘  என்றும்,  “ அறங்கிளரும் நால்வேதம் ஆலின்கீழ் இருந் தருளி “  என்றும் குறிப்பிட்டதையும் காண்க.  இத்துடன் தமிழில் மறை உண்டு என்பதைத் தேவாரம்,  “ மறை இலங்கு தமிழ் “  என்றும்  “ மறை வளரும் தமிழ் மாலை “  என்றும் குறிப்பிட்டுப் பாடியதையும் காண்க.

    இன்னோரன்ன குறிப்புக்களினால் தமிழில் மறை உண்டென உணர்க.  அந்தோ!  இறைவர் சனகாதியர்கட்கு அருளிய மறைகள் மறைந்து போயின.  என்றாலும், அந்நான் மறைகளின் உட்பொருளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவன நம் சைவத் திருமுறைகளும், திருக்குறளுமே ஆகும்.  இந்த உண்மையினை,

    தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
    திருவா சகமும் திலமூலர் சொல்லும்   
    ஒருவா சகமென் றுணர்.

என்று ஒளவை மூதாட்டியார் அறிந்து கூறிய அமுதவாக்கால் நன்கு உணரலாம்.

    இந்தத் திருமுறைகளாம் தமிழ் மறையில் அமைந்த பல இரகசியங்களைச் சேக்கிழார் பெருமானார், வெளிப்பட எடுத்து மொழிந்துள்ளார்.  இதற்கு உதாரணம் வேண்டுவார் ஞான சம்பந்தர் பாடிய,