பக்கம் எண் :

5

 

       செங்கீரைப் பருவம்

239

5.  பொருந்துமா யிரமுகக் கங்கைமர பில்கதிர்கள்
      பொலியுமா யிரம்உள்ளவன்
  போல்தோன்றி ஆயிரம் மறைக்கும்எட் டாச்சென்னி
      பொற்பஆ யிரமுடையகோன்
  மருந்துநேர் அருள்பெற்ற மைக்கேற்ப ஆயிரம்
      வயங்குபொன் கால்நிறீஇய
  மண்டபம் இவர்ந்தா யிரம்தொண்டர் வரலாறு
      வாய்மலர்ந் தவவாவிவாய்
  இருந்துசூழ் கொழுவுண்டு புண்டரீ கத்தின்வாய்
      இயைபுல வுறத்துவட்டி
  இருஞ்சங்க னம்பேடெ னத்தழுவி நாணமுற்
      றியல்பேடு மற்றென்றுனும் 
  செருந்துசூழ் குன்றையம் பதியருள் மொழித்தேவ
      செங்கீரை யாடியருளே
  திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக
      செங்கீரை யாடியருளே.

    (அ. சொ)  கங்கை மரபு- வேளாளர் குலம், பொலிவும்-விளங்கும், கதிர்கள் பொலியும் ஆயிரம் உள்ளவன் சூரியன், ஆயிரம் மறை-அளவில்லாத வேதம், ஆயிரம் என்றது அளவிட முடியாத என்னும் பொருளது, முகம்-வழிக்கால்கள், பொற்ப-அழகுற, ஆயிரமுடையகோன்-இறைவன், மருந்து- தேவாமுதம், நேர்-நிகரான, கால்-தூண், வயங்கு-விளங்கும்.  நிறீஇய-நிறுவப்பெற்ற, இவர்ந்து-ஏறி,  ‘ மலர்ந்தவ-திருவாய் மலர்ந்தவரே, வாவிவாய்-குளத்தில், கொழு-நிணத்தை, புண்டரீகத்தின்வாய்-தாமரைமலரில், இயை-கலந்து.   இருந்து, புலவு-புலால் நாற்றம், உற-பொருந்த, துவட்டி-வாடச்செய்து, இருஞ்சங்கு-பெரியசங்கை.  அனம்-அன்னம், பேடு-தன் பெண் அன்னம் என்று, இயல்-பொருந்திய, மற்று-வேறொன்று, உனும்-எண்ணும், செருந்து-செருந்தி மலர்.