பக்கம் எண் :

New Page 1

24

             காப்புப் பருவம்

தொட்ட வழக்கு, வீற்றிருக்கம் சிறப்புடன் பொருந்தி இருக்கும், ஏர் - அழகு, வழு அரும் - குற்றம் இல்லாத, எழுவரும் - எழு அடியாரகள், தழுவ அரும் - தழுவ முடியாத, தழால் - தழுவி, உறைந்திட - உள்ளத்தில் பொருந்திட ஏத்தெடுப்பாம் - போற்றுவாம்.

    விளக்கம்: காப்பு என்பது காவல்.  ஈண்டுக் காப்புப் பருவமானது பாட்டுடைத் தலைவனாம் குழந்தையைக் காக்குமாறு தெய்வங்களை வேண்டும் பருவமாகும்.  குழந்தையின் பருவங்களைப் பகுத்துக் கூறும் புலவர், குழந்தையைக்காக்கப் படவேண்டிய தெய்வங்களைப் பற்றிப் பருவம் என ஒன்றை வகுத்துக் கொண்டு பிள்ளைத் தமிழைப் பாடுவார்.

    பிள்ளைத் தமிழுக் குரிய பருவங்கள் இன்ன என்பதைக் கூற வந்த இலக்கண விளக்கம்,

        கடுங்கொலை நீக்கிக் கடவுள் காப்பச்
        செங்கீரை தால்சப் பாணி முத்தம்
        வாரா னைமுதல் வகுத்திடும் அம்புலி
        சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னும்
        பெறுமுறை ஆண்பால் பிள்ளைப் பாட்டே

என்று குறிப்பிட்டிருத்தல் காண்க.  அப்பருவ அமைப்புக்கள் இந்நூலில் அமைந்திருத்தலைஅறியவும்.

    காப்பு, குழந்தை பிறந்த இரண்டாம் மாதத்தில் கூறப்படும் என்பர்.  பெதுவாகக் காப்புப் பருவத்தில் இறைவன் இறைவி, திருமால், முருகன், கணபதி முதலான தெய்வங்களை வேண்டிக் குழந்தையைக் காக்க என்று பாடுதல் மரபு. இம்முறைகளை எல்லாப் பிள்ளைத் தமிழ் நூற்களில் காணலாம்.  ஆனால், திரு பிள்ளை அவர்கள், சேக்கிழார் பெருமானுக்குக் காப்புத் தெய்வமாக எல்லோரும் பாடும் பொதுமுறையை மேற் கொள்ளாமல், ஒருதனிச் சிறப்பு முறையைக் கைக்கொண்டனர்.  திரு பி்ள்ளைஅவர்கள் பாடும் இப்பிள்ளைத் தமிழுக்குச் சேக்கிழார் பெருமானார் பாட்டுடைத்