பக்கம் எண் :

என

 

       செங்கீரைப் பருவம்

241

என்பதையும், திருநாவுக்கரசர் வாக்காகிய,

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகத் தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

என்பதையும் கண்டு தெளிக.

    மருந்து என்றது ஈண்டுத் தேவாமுதத்தை என்க.  இப்பொருள் இச் சொல்லுக்குண்டு என்பது,

    விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டாற்பாற்று அன்று

என்ற இடத்து வந்துள்ளதைக் கொண்டு தெளிக.

    சேக்கிழார் தமது பெரிய புராணத்தை இயற்றிய இடம் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபம் ஆகும்.  இதனைத்திருத் தொண்டர் புரண வரலாற்று நூல்,

        வந்துசூழ் நிரைத்த ஐஇரு
            நூறு கால்மணி மண்டபத்
        தெந்தையார் திருவருளை உன்னி
            இருந்து சேவையர் காவலர்
        செந்த மிழத்தொடை யால்வி
            ளங்கிய திருவி ருத்தனார்
        தந்தசொல் முதலாஎ டுத்தனர்
            தாணு வானபு ராணநூல்

கூறுகிறது. இவை அனைத்தையும் இயைத்தே,  “ இவர்ந்து ** மலர்ந்தவா “ என்று விளித்தருளினர்.

    சங்குகள் வெண்ணிறமாக இருந்தன.  அவ்வெண்ணிறச் சங்குகளை ஆண் அன்னம் தன் பெடை அன்னம் என்று எண்ணித் தழுவியபின்னர், அது பெடையன்னம் அன்று என்று அறிந்து நாணமுற்றுத் திரும்பிய செயல்  “ சங்கம் அனப்பேடு எனத் தழுவி நாண “  என் குறிப்பிடப்பட்டிருப்பது, இலக்கியச் சுவைக்கு ஏற்றதாகும்.  இவ்வாறு கூறப்பட்டது மயக்க அணிக்கு ஏற்ற உதாரணமாகும்.