என
என்று
திருஞான சம்பந்தரும் இந்த யோக மார்க்கம் இன்னது என்பதைக் குறிப்பிட்டனர்.
தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேஓர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் அடிகட்கே
என்ற சுந்தரர் செந்தமிழும்
யோகமார்க்க இயல்பினைக் குறிப்பிடுதலைக் காணலாம்.
அப்பர் பெருமானார்
சிவயோக மார்க்க நிலையினை அறிவிக்கும்கால்,
உயிரா வணம்இருந்து
உற்று நோக்கி
உள்ளக்
கிழியின் உருவெழுதி
உயிரா வணம்செய் திட்டுஉன்கைத்
தந்தால்
உணரப் படுவாரோ
டொட்டி வாழ்தி
அயிரா வணம்ஏறா தான்ஆன்
ஏறுஏறி
அமரர்நா டாளாதே
ஆரூர் ஆண்ட
அயிரா வணமேஎன் அம்மா
னேநின்
அருட்கண்ணால் நோக்காதார்
அல்லா தாரே
என்று கூறிப் போந்தார்.
ஞானமார்க்கமாவது (சன்மார்க்கம்)
சரியை, கிரியை யோக முதிர்ச்சியால் சரீரத் தொழில் மனத் தொழில், இரண்டையும் விடுத்து,
கேட்டல், சிந்தித்தல் ஆகிய அறிவுத் தொழிலில் இறவனை வழிபட்டு நல்வழிப்படுவதாகும்.
மேலும், இதனை விளக்கினால் இறைவன் அருவுருவம் கடந்த திருஉரு உடையவராகக் கேட்டல் ஆதியாய ஞானமாரக்கத்தின்படி
அறிவால் வழிபடுதல் எனலாம்.
இதனைத் தெள்ளத் தெளியச்
சிவஞான சித்தியார்,
சன்மார்க்கம் சகலகலை
புராண வேத
சாத்திரங்கள்
சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப்
பொருள்பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப்
பரசிவனைக் காட்டும்
|