பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

267

        பாலனாம் மறையோன் பற்றப்
            பயங்கெடுத் தருளுக ஆற்றல்
        மாலும்நான் முகனும் காணா
            வடிவுகொண் டெதிரே வந்து
        காலனார் உயிர்செற் றார்க்குக்
            கமழ்ந்தகுங் குலியத் தூபம்
        சாலவே நிறைந்து விம்ம
            இடும்பணி தலைநின் றுள்ளார்

என்று குங்கிலியக்கலயர் தொண்டு பற்றிச் சேக்கிழார் கூறியுள்ளார்.

    பெருமிழலைக் குறும்பனார் யோக நெறியினர் என்பதைச் சேக்கிழார்,

        நாலு கரணங் களும்ஒன்றாய்
            நல்ல அறிவு மேற்கொண்டு
        காலும் பிரம நாடிவழிக்
            கருத்துச் செலுத்தக் கபாலநடு
        ஏல வேமுன் பயின்றநெறி
            எடுத்த மறைமூ லந்திறப்ப
        மூல முதல்வர் திருப்பாதம்
            அடைவார் கயிலை முன் அடைந்தார்

என்று பாடியுள்ளார்.

    பெருமிழலைக் குறும்பர் சிறந்த யோகி என்பதைத் துறை மங்கலச் சிவப்பிரகாசரும், “பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி “ என்று சிறப்பித்துள்ளனர்.  யோகியர் செயலைப் பற்றி முன்னர் விளக்கப்பட்டதையும், இந்நாயனார் செயலையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவர் யோகியர் என்பது தெள்ளத் தெளிய அறிய வரும்.  திருமூல நாயனார் ஞான நெறிக்கு ஏற்ற சான்றாய் இருப்பவர்.  அவரைப் பற்றிக் கூறவந்த இடத்துச் சேக்கிழார் பெருமானார்,

    உள்ளுணர் வான ஞான முதலிய ஒருநான் குண்மை
    தெள்ளுதீந் தமிழால் கூறும் திருமூலர்

என்றும்,