பக்கம் எண் :

New Page 1

268

             செங்கீரைப் பருவம்

    முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையினில்
    வந்தசெயல் ஆராய்ந்து தெளிகின்றார்

என்றும் கூறிப் போந்தார்,

    இல்லறத்தில் வாழ்ந்தவர், திருநீலகண்ட நாயனார்.  இவர் இல்லற நெறியினர் என்பதை “ வையகம் போற்றும் செய்கை மனையறம் புரிந்து வாழ்வார் “ என்று கூறப்பட்டிருப்பதால் உணரலாம்.

    துறவற நெறியில் நின்றவராக விறல் மிண்டரை எடுத்துக் காட்டலாம்.  துறவு உள்ளம் படைத்தவர்க்கு உரிய உபதேசம் இன்னது என்பதை வள்ளுவனார்,

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

என்று கூறியிருப்தற்கு இணங்க விறல்மிண்ட நாயனாரும்,

        அப்பொற் பதியின் இடைவேளாண்
            குலத்தை விளக்க அவதரித்தார்
        செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
            சிவனார் செய்ய கழல்பற்றி
        எப்பற் றினையும் அறஎறிவார்
            எல்லை தெரிய ஒண்ணாதார்
        மெய்ப்பத் தர்கள்பால் பரிவுடையார்
            எம்பி ரானார் விறல்மிண்டர்

என்று சேக்கிழாரால் கூறப்பட்டிருத்தலின், இவர் துறவற நெறியினர் என்பது புலனாயிற்று.

    கவர்மனம் ஒழியவர் (அதாவது வஞ்சகமாகப் பொருளைக் கவரும் மனத்தை ஒழித்தவர்) என்பதற்குரியவராக அமர்நீதி நாயனாரைக் காட்டலாம்.  அவரிடம் இறைவர் கோவணம் ஒன்றைக் கொடுத்து மீண்டு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.  அதனை இவர் வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்தனர்.  அமர் நீதியாரிடம் வந்தவர் இறைவர் ஆதலின் அக்கோவணம் மறையுமாறு செய்தனர்.  இறைவர்.  பின்னர் வந்து அக்கோவணத்தைத் தருமாறு கேட்டபோது, அக்கோவணம் வைத்த இடத்தில் இராமை