என
என்ற பாடலிலும், திருஞானசம்பந்தர்பற்றிய
புராணத்தில்,
சோதி முத்தின்
சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண்
ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அருள்
ஆதலின் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய
உலகெலாம்
என்று புராணத்தின்
இடையில் பொருத்தப் பட்டிருத்தலையும்,
என்றும் இன்பம்
பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்
துள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி
யார்அவர் வான்புகழ்
நின்ற தெங்கும்
நிலவி உலகெலாம்
என்று புராணத்தி்ன் ஈற்றுப்
பாடலிலும் பொருந்தி இருந்தலைக் காண்க. இவற்றின் குறிப்பே “ உலகெலாம் எனும் சுருதி நாப்பண்ணும்
ஈற்றும் பொருத்தி “ என்னும் தொடரில் காணப்படுவது. சைவ பரிபாஷை என்பது சைவ சமையிகட்குள்ளேயே
அறிதற்குரிய சொல்லும் பொருளும் ஆகும். சேக்கிழார் இத்தகைய சைவ பரிபாஷைகளை ஆளவல்லவர்
என்பது, கோட்புலிநாயனார் புராணத்து அவர், திருவிரையாக்கலி என்று குறிப்பிட்டிருத்தல் கொண்டு
தெளியலாம்.
தந்தமர்கள் ஆயினார்
தமக்கெல்லாம் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்
கேற்றியநெல் இவையழிக்கச்
சிந்தைஆற் றாநினைவார்
திருவிரையாக் கலிஎன்று
வந்தனையால் உரைத்தகன்றார்
மன்னவன்மாற்றார் முனையில்
என்ற அப்புராணப்பாடலில்
காண்க. ஈண்டுத் திருவிரையாக்கலி என்பது, சிவபெருமானைக் குறித்துச் சொல்வதோர் ஆணை எனப்
பொருள்படும். இது சைவப் பெருமக்களுக்கே அன்றி, வேறு யாவரும் அறிதற்கு இயலாதது.
சேக்கிழார்
சம்பிரதாய முறைகளை நன்கு உணர்ந்தவர். இதனை இவரது புராணத்துள் பல இடங்களில் காணலாம். திண்ணனார்
கன்னிவேட்டைக்குப் போகுமுன், தேவராட்டித்
|