New Page 1
“நீற்றின் வெள் ஒளியால்,
நாவால் எவரும் அர முழக்கம் நாளும் செய” என்றனர். குன்றை நகரத்தினர் வந்த விருந்தினரை
உபசரிக்கும் இயல்பு பெற்றவர். ஆகவே, எத்திசையில் இருக்கும் புலவர்களும் அமுது கொள ஆண்டுப்
புகுந்தனர். இதனையே “எண்பால் புலவர் அமுதுகொளற்கு எந்த இடத்தும் நெருங்குதலால்” என்றனர்.
எங்கும் வாழைகள் வளர்ந்து குற்த்தூர் காட்சி அளிப்பதை இன்றும் காணலாம். இக்குறிப்பை ஈண்டு
‘ஏர்சால் அரம்பை எழுதலினால்,’ எனப்பட்டது.
குன்றத்தூரில் திருநாகேச்சுரம்
என்னும் கேவில் உளது. இது சேக்கிழார் பெருமானாரால் அமைக்கப்பட்ட திருக்கோயில். திருநாகேச்சுரம்
என்னும் தலம் சோழ நாட்டில் ஒன்று உளது. அதுவே ஆதி திருநாகேச்சுரம். நாகராசனால் பூசிக்கப்பட்ட
காரணத்தால் இப்பெயர் பெற்றது. இவனே அன்றி, சந்திரன் சூரியன், முதலியோரும் பூசித்து அருள்
பெற்றுள்ளனர். இதனைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர்.
இத்தலம் திரு நாகேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.
இஃது இரண்டாம் ராஜராஜனாலும் மூன்றாம் குலோத்துங்கனாலும் புதுப்பிக்கப்பட்டது. முன்னர் இது ஜைன
ஆலயமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சுவாமியின் திருப்பெயர் சண்பகாரண்யேஸ்வரர் தேவியார்,
குன்றுமுலைநாயகி எனப்படுவர். அம்மனுக்கு அபிடேகம் இல்லை. புனுகு சட்டம் சாத்தப்டுவதாகக் கூறப்படுகிறது.
சங்கநிதி பதுமநிதி இன்ன என்பதைச் சிலைவடிவில் இருப்பதை இங்குக் காணலாம். இங்கு வாழ்பவர்கட்குச்
சர்ப்பபயம் இல்லை. கோபுரத்தின் மூலம் இறைவர்க்குச் சூரிய பூசை நிகழ்வதைக் காணலாம். இத்தகைய
சீரும் சிறப்பும் உடைய தலத்தின்மீது மிகுதியும் அன்பு கொண்டவர் சேக்கிழார். அத்தலம்
சோழ நாட்டில் இருப்பதால், அத்தலத்தின் பெயரால் தம் தொண்டை நாட்டில் ஒரு கோயில் அமைக்க
எண்ணிய சேக்கிழார், தாம் பிறந்த குன்றத்தூரில் அக்கோயிலை அமைத்துக்கொண்டனர். அக்கோயிலே
இப்போது
|