New Page 1
பொன்னகரம்-தேவலோகம்,
இமைத்தல்-ஒளிவிடுதல், விதி-பிரம்மதேவன், உளத்தில்-மனத்தில், ஆடூஉ-ஆண்களும் மகடூஉ-பெண்களும்,
நந்த-மிகுமாறு, தழைக்குமாறு, நண்ணியவர்கட்கு-கலந்து கொண்டவருக்கு, கதி-மோட்ச இன்பம், இது-இந்தக்
குன்றத்தூர், புவியகத்து-பூமியில், சந்தத்தவர்-கவிகள், வண்ணச் செய்யுள்களைப் பாடுபவர்.
விளக்கம் :
அணி வகைகளில் உயர்வு நவிற்சி அணியும் ஒன்று. அவ்வணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்பாடலின்
முதல் நான்கு அடிகள் அமைந்துள்ளன. குன்றத்தூரில் உள்ள மாளிகைகளும், நிலா முற்றங்களும், திண்ணைகளும்,
ஆகியவற்றின் முற்பகுதிகள் பொன்னாலும், மணியாலும் அமைந்துள்ளன என்று கூறப்பட்ட காரணத்தால்,
இஃது உயர்வு நவிற்சி அணியாயிற்று. “வீறுகோள் அணி” என்று கூறினும் அமையும். தேவலோகம்
பொன்னுலகம் என்று கூறப்படுதல் மரபு. அத்தேவலோகம்போல, இந்தக் குன்றத்தூரும், விளங்குகிறது.
அத்துடன், அத்தேவலோகத்தை விடவும் ஒளிவிட்டுத் திகழ்கிறது. அக்காரணம் கொண்டே தேவலோகத்தில்
உள்ள ஆண், பெண் என்னும் இரு பாலாரும் கண் இமைத்தலைக் குறைத்துக்கொண்டனர் என்று கூறியிருப்பது
தற்குறிப்பு ஏற்ற அணியின்பால் படும். விண்ணுலக ஆடவர் பெண்டிரும் இமையாது பார்த்த வண்ணம்
இருந்தனர் என்று கூறினும் அமையும்.
திருஞான சம்பந்தரின்
திருமணத்திற்கு வந்திருந்தவர் யாவரும் வீடு பேறுற்றுப் பேரின்பம் எய்தினர். எல்லோரும் சோதியுள்
புகுந்தனர் என்பதைச் சேக்கிழார்,
அணிமுத்தின் சிவிகைமுதல்
அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை மடவார்மங்
கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த்
தொழுதுடன்புக் கொடுங்
கினார்
என்று பாடியறிவித்தனர்.
|