இங
இங்ஙனம் எவரும் எளிதில்
வீடுபேறு பெற்றமையை எண்ணியும், இதனைத் தாம் பெற இயலாமல் போயிற்றே என்றும் நொந்து, இராமலிங்க
வள்ளலார் ஒரு பாடல் பாடியுள்ளார். அதுவே,
எங்கோவே
யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர்
பொருட்சுமையா ளானேல்-இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன்
தடைபட்டேன் ஆதலின்இந்
நாள்வருந்த வேண்டுகின்றேன்
நான்
என்பது.
திருஞான சம்பந்தரது
அருள் பண்பு திகழும் இடங்கள் பற்பல. அவற்றுள் சில கொல்லிமழவனது மகள் முயலகனாம் பொருவில்
அரும் பிணியினால் வருந்துவதை அறிந்து, திருப்பாச்சிலாச்சிராமப் பரமனை நோக்கி,
அணிவளர் கோலம்எலாம்
செய்து
பாச்சிலாச்சிராமத் துறைகின்ற
மணிவளர் கண்டரோ
மங்கையை
வாடமையல் செய்வதோ
இவர்மாண்பே
என்று பாடி அந்நோயைப்
போக்கியதும், திருக்கொடி பாடச் செங்குன்றூரில் தம்முடன் இருந்த அடியவர்கள் நளிர் சுரத்தால்
நலிந்தபோது,
கைவினை செய்து
எம்பிரான்
கழல்போற்றுதும்
நாம்அடியோம்
செய்வினைவந் தெமைத்
தீண்டப்
பெறாதிரு நீல
கண்டம்
என்று பாடி அந்நளிர்க்
காய்ச்சலைப் போக்கியதும், பாம்பு கடித்து இறந்த வணிகன் பொருட்டு அழுது அரற்றிய வணிக மகளின்
அரற்றலையும், அழுகையினையும் கேட்டு அருள் கொண்டு, திருமருகல் இறைவனை நோக்கி,
|