பக்கம் எண் :

290

       தாலப் பருவம்

 

தால் இயைந்த, எயில்-மதில், காஞ்சி-காஞ்சிபுரத்தை, அன்னான்-அத் திருமால், அஃது-அந்தக் குன்றத்தூர், எந்நாவலரும்-எத்தகைய பெரும் புலவர்களும், சரிவில்-குறையாத, சால்-நிறைந்த.

    விளக்கம் :  திருமாலின் இயற்கைத் திருமேனி, வெண்ணிறமாகும்.  பின்னர் அது பச்சை வண்ணம் ஆயது.  இங்ஙனம் பச்சை வண்ணம் ஆயதற்குக் காரணம் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அதனின்று எழுந்தவிடத்தின் கொடுமையே ஆகும்.  அதன் வேகமே திருமாலின் நிறத்தை மாற்றியது என்க.  இதனை நமது நாவுக்கரசராம் நல்லோர் அழகுற,

        பருவரை ஒன்று சுற்றி அரவம்கை
            விட்ட இமையோர் இரந்து பயமாய்த்
        திருநெடு மால்நி றத்தை அடுவான்
            விசும்பு சுடுவான் எழுந்த விசைபோய்ப்
        பெருகிடம் மற்றி தற்கொர் பிதிகாரம்
            ஒன்றை அருளாய் பிரானே எனலும்
        அருள்கொடு மாவிடத்தை எரியாமல்
            உண்டவன் அண்டர் அண்டர் அரசே

என்று பாடியருளினர்.

    காஞ்சி புராணமும், திருமாலுக்கு இவ்வாறு வண்ணம் மாறியதை,

        வருகனல் வல்விடம் தாக்கி
            மாயவன் வெண்ணிற மேனி
        கரிகினன் அன்றுதொ டங்கிக்
            கரியன் எனப்பெயர்ப் பெற்றான்

என்று கூறுகிறது.  பின்னர் ஏகம்பர நாதரைப் பூசித்துச் செந்நிழப் பெற்றனன்.

    நகரத்தின் செல்வச் சிறப்பு ஆண்டுள்ள அழகிய திரு மாளிகையின் மூலம் அறியலாம்.  சச்சந்த மகாராசனது அரண்மனையும், இவ்வாறு இருந்தது என்பதைச் சீவக சிந்தாமணி,