| 
பத
 
        பத்தியின் 
பால ராகிப் பரமனுக்கு 
            ஆளாம் அன்பர் 
        தத்தமில் 
கூடி னார்கள் தலையினால் 
            வணங்கு 
மாபோல் 
        மொய்த்தநீள் 
பத்தி யின்பால் முதிர்தலை       
            வணங்கி 
மற்றை 
        வித்தகர் 
தன்மை போல விளைந்தன 
            சாலி எல்லாம் 
என்றும், 
    நம்பி ஆரூராரும் 
பரவையாரும் ஒருவரை ஒருவர் சந்தித்த நிலையினைக்  குறிப்பிடுகையில், “அற்புதமோ சிவன் அருளே 
அறியேன் என்று அதிசயித்தார்” என்றும், “ மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ” 
என்றும், பரவையாரைக் கண்டு காதலால் உளந்தளர்ந்த நிலையில் பரவையாரை நினைந்து, 
        ஈச 
னார்அருள் எந்நெறிச் சென்றதே 
        
எம்பி 
ரான்அருள் எந்நெறிச் சென்றதே        
        எந்தை 
யார்அருள் எந்நெறிச் சென்றதே 
என்றும், 
    இருண்ட நிலையினைக் 
கூறுகையில், “அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர், நெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்” என்றும், நிலவின் 
ஒளியினைக் கூறுகையில் “வெண்ணீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா” என்றும் பாடியிருப்பது கொண்டு 
சேக்கிழார் சைவப் பயிர்த் தழையத் தழையும் புயல் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை அன்றோ? 
    ஏனைய புலவர்கள் 
வாக்கில் பெரிதும் காமப் பயிர் வளரும் முறையில் கவிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.  எடுத்துக் 
காட்டிற்குக் கல்வியில் பெரியராம் கம்பரை எடுத்துக் கொள்வோம்.  வெள்ளத்தைப் பற்றிக் 
கூறுகையில் “மலையில் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை 
 |