New Page 1
முதல் பொருள், ஆதிய-முதற்
பொருள், கருப் பொருள், உயிர்ப் பொருள் முதலான, ஆற்றுப் புனல் நாமப் பொருள்கோள்-ஆற்றொழுக்குப்
பொருள்கோள், என்ற பெயருடன் சொல்லப்படும் பொருள்கோள், அறை-சொல்லப்படும், மற்றுள்ளனவும்-வில்பூட்டு,அளைமறியாப்பு, மொழிமாற்று, நிரல்நிரை, தாப்பிசை, கொண்டு கூட்டு அடிமறி மாற்று, பாவகைகள், சந்தங்கள், முதலியன என்பன. நவின்றவ-பாடியவரே, அடருபு-அடர்ந்து, தாற்றுக் கதலி-குலைகளைக்
கொண்ட வாழை.
விளக்கம் :
அணி வகைகளுள் பெரும் பிரிவாகப் பொருள் அணி சொல்லணி என்பர் இலக்கணிகள். அச்சொல்லணிகள்
பலவாகும். அப்பலவகைச் சொல்லணிகளை நம் சேக்கிழார் பெருமானார் தம் நூலகத்துப் பற்பல விதத்தில்
அமைத்துப் பாடியுள்ளார்.
பண்தரு விபஞ்சி
எங்கும்
பாதசெம்
பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள்
எங்கும்
வளர்இசைக்
குழல்கள் எங்கும்
தொண்டர்தம்
இருக்கை எங்கும்
சொல்வது இருக்கை எங்கும்
தண்டலை
பலவும் எங்கும்
தாதகி
பலவும் எங்கும்
மாடுபோ தங்கள்
எங்கும்
வண்டுபோ
தங்கள் எங்கும்
பாடும்அம்
மனைகள் எங்கும்
பயிலும்அம்
மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள்
எங்கும்
நிதிநிகே
தனங்கள் எங்கும்
தோடுசூழ்
மாலை எங்கும்
துணைவர்சூழ்
மாலை எங்கும்
இப்பாடல்களில் சொல்லணி
இருத்தலைக் காணலாம்.
உவமை, உருவகம் தன்மை,
வேற்றுப் பொருள் வைப்பு தற் குறிப்பேற்றம் முதலிய அணிகள் பொருள் அணியின்
|