பக்கம் எண் :

அள

 

       தாலப் பருவம்

331

அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல் லியில்கோத்த பான்மைஎனத்
துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய
                                    குன்றுகளும்

    எய்து மென்படை யோடிரை தேர்ந்துண்டு
    பொய்கை யில்பகல் போக்கிய புள்ளினம்
    வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
    பையுள் மாலை தமியோர் பனிப்புற

    பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
    வஞ்ச மாக்கடம் வல்வினை யும்அரன்
    அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர்
    நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்

    போத ஞானப் புகலிப் புனிதரைச்
    சீத முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக்
    காதல் செய்பவன் போலக் கருங்கடல்
    மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவள்

என்பனபோன்ற கவிகள் பெரும்பொழுது, சிறுபொழுதுகட்கு ஏற்ற கவிகள்.

    புணர்ச்சி:

        பண்டுநிகழ் பான்மையினால்
            பசுபதிதன் அருளாலே
        வண்டமர்பூங் குழலாரை
            மணம்புணர்ந்த வன்தொண்டர்
        புணடரிகத் தவள்வனப்பைப்
            புறங்கண்ட தூநலத்தைக்
        கண்டுகேட்டு உண்டுஉயிர்த்துற்
            றமர்ந்திருந்தார் காதலினால்

என்று சுந்தரர் சங்கலியாரைப் புணர்ந்து இன்புற்ற நிலையினையும்,