என
என்ற சூத்திரத்தால்
உணரலாம். இதற்குப் பெரிய புராணத்துள் எடுத்துக் காட்டு.
அரிதரு செந்நெல்
சூட்டின்
அடுக்கிய
அடுக்கல் சேர்ப்பர்
பரிவுறத்
தடிந்த மன்மீன்
படர்நெடும்
குன்று செய்வார்
கரிவளை
சொரிந்த முத்தின்
சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
விரிமலர்க்
கற்றைவேரி
பொழிந்திழி
வெற்பு வைப்பார்
என்பது.
மொழிமாற்றுப்
பொருள் கோளாவது,
ஏற்ற பொருளுக்கு
இயைய மொழிகளை
மாற்றியோர்
அடியுள் வழங்கல்மொழி மாற்றே
என்பது. இதற்குத் தொண்டர்
புராணத்துள்,
நீலமா மஞ்சை
ஏங்க நிரைக்
கொடிப்
புறவம் பாடக்
கோலவெண்
முகையேர் முல்லை
கோபம்வாய்
முறுவல் காட்ட
ஆலுமின் இடைசூழ் மாலைப்
பயோதரம்
அசைய வந்தாள்
ஞாலநீ டரங்கில்
ஆடக்
காரெனும்
பருவ நல்லாள்
என்ற பாடலே ஆகும்.
வாய், கோபம் காட்ட
முறுவல் முல்லை காட்ட என மொழிமாறி நின்று பொருள் காட்டலைக் காண்க. நிரல் நிறைப்
பொருட்கோள் என்பது,
பெயரும் வினையுமாம்
சொல்லையும் பொருளையும்
வேறு நிரல்நிறீஇ
முறையினும் எதிரினும்
நேரும்
பொருள்கோள் நிரல்நிறை நெறியே
|