பக்கம் எண் :

என

 

       தாலப் பருவம்

335

என்ற நூற்பாவால் விளங்கும்.  அதாவது வரிசையாகச் சொற்களை நிறுத்தி நேரே பொருள் கொள்வது.

பொருகரியொடு சினஅரிஇடை புரைஅற உடல்புகலால்
வரும்இரவொடு பகல்அணைவன எனமிடையும் அவ்வனமே

என்னும், இப்பெரியபுராண அடிகளில் கரிக்கும் இரவும் அரிக்குப் பகலும் அமைந்திருப்பது நிரல் நிறை அணிக்கு எடுத்துக் காட்டு.

    இருட்கடுவுண்டவர் அருளும் அகிலம்
        எல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும்கூடித்
    தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று
        செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே

    என்னும், இத்தொண்டர் புராண அடிகளில் எதிர் நிரல் நிறை பொருள்கோள் அமைந்துள்ளது.  கடுவுண்டர் அருள் அரசு, ஈன்றான் தன் திருவருள், ஞானக்கன்று என்று இயைத்துப் பொருள் காணவேண்டி இகுத்தலின் எதிர்நிரல் நிறை ஆயிற்று.  பூட்டு வில் பொருள்கோளின் இலக்கணம்,

        எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்
        பொருள்நோக் குடையது பூட்டுவில் ஆகும்

என்பது.

    அதாவது வில்லின் கடைநாண் வில்லின் தலையில் பூட்டப்படுவதுபோல், பாட்டின் ஈறும் பட்டின், முதலும் பொருந்திப் பொருள் தருவதாகும்.    இதற்கு   ஏற்ற  எடுத்துக் காட்டாக,

    மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் கும்காலைத்
    தான்அதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
    ஊனமிகு பகைதிறந்தால் கள்வரால் உயிர்தம்மால்
    ஆனபயம் ஐந்தும்தீர்த் தறம்காப்பான் அல்லனோ

என்ற பாடலைக் காட்டலாம்.  இப்பாட்டின் இறுதி, முதல் தொடருடன் பொருந்திப் பொருள் உணர்தலைக் காண்க.