New Page 1
கொண்டு கூட்டுப்
பொருள்கோளாவது:-
யாப்படி பலவினும்
கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது
கொண்டு கூட்டே
என்பது.
அதாவது பாட்டின்
அடிகளில் உள்ள சொற்களைப் பொருள் முடிபுக்கு ஏற்பக் கொண்டு கூட்டுவ தாகும்.
திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்
என்னும் பாடலின்
பொருளை உணரவேண்டின், ஒரு நாவுக்கு என்று தொடங்கி, பேருலகில் என்பதனுடன் இயைத்துப் பின் திருநாவுக்கரசு
என்பதோடு தொடர்ந்து சீர்பரவலுறுகின்றேன் என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் முறையினை
மேற்கொள்ள வேண்டலின், இது கொண்டு கூட்டுப் பொருளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும்.
அடிமறி மாற்றுப்
பொருள் கோளாவது,
ஏற்புழி எடுத்துடன்
கூட்டுறு மடியவும்
யாப்பீ றிடைமுதல்
ஆக்கினும் பொருள்இசை
மாட்சியும் மாறா
அடியவும் அடிமறி
என்பது.
அதாவது செய்யுளில்
அமைந்த நான்கு அடிகளை முன்னும் பின்னும் இடையும் வைத்துப் பொருள் காணினும் அஃது அடிமறி மாற்றுப்
பொருள் கோளாம்.
மேகமும்
களிறும் எங்கும்
வேதமும்
கிடையும் எங்கும்
யாகமும்
சடங்கும் எங்கும்
இன்பமும்
மகிழ்வும் எங்கும்
யோகமும்
தவமும் எங்கும்
ஊசலும் மறுகும் எங்கும்
போகமும்
பொலிவும் எங்கும்
புண்ணிய
முனிவர் எங்கும்
|