New Page 1
செய்து முடிக்குங்கால் வலி அறிந்து செய்யவேண்டும். வலி அறிதலைப் பற்றி வள்ளுவர் கூறுங்கால்,
வினைவலியும் தன்வலியும்
மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச்
செயல்
உடைத்தும் வலிஅறியார்
ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார்
பலர்
என்று கூறிப் போந்தார்.
தன் தூக்கித் தன்துணையும்
தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார்-அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு
யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி
விடும் என்பது பழமொழி.
வினையின் வலியா திகள்நான்கு
வேறு வேறு சீர்தூக்கி
நினது வலிமிக் குழிவினையை
நிகழ்த்து.
என்பது விநாயக புராணம்.
வன்மையும், எவற்றையும்
அறிந்து செய்யும் இயல்பும் அரசர்கட்கு இருப்பினும், இனிய மொழி கூறுதலும் அரசர்கட்கு இன்றியமையாத
பண்பாகும். இதனை வள்ளுவர்,
“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”
என்று விதந்து கூறினர்.
பரஞ்சோதியார்,
கனியமுதம் அன்னகரு
ணைக்குறையுள் காட்சிக்கு
எளியன்வட சொற்கடல்
தமிழ்க்கடல் இகந்தோன்
என்றனர். கச்சியப்ப
முனிவர்,
தங்கள் விழுக்குறை முறைசொல்
வார்க்குத்
தடையறக் காட்சி நல்கித்
தண்ணிய இன்சொல் காட்டி
என்றனர். கம்பர்,
இனிய சொல்லினன்
ஈகையன் எண்ணினன்
இனியன் தூயன்
விழுமியன் வென்றியன்
|