பக்கம் எண் :

360

       சப்பாணிப் பருவம

 

    நினையும் நீதி நெறிகட வான்எழில்
    அனைய மன்னற்கு அழிவும்உண் டாங்கொலோ

என்றனர்.

    இத்தகைய பண்பினை ஈண்டு ஆசிரியர், “கடிய மாற்றம் நவிலாத குணமும் ***  நலன் ஓங்கு காட்சிக்கு எளிமையும் உடையவன்” என்று குறிப்பிட்டனர்.

    “மன்னர்கள் தம் கருத்தையே, குறிப்பையோ, பிறர் அறியாதவாறு நடந்து கொள்ளல் வேண்டும்.  இதனைக் கருதியே திரு பிள்ளை அவர்கள் “உழையரும் விருப்பம் அறியாதடக்கல்” என்றனர்.

    வேளாளர்கட்குரிய மேம்பாடுகள் பல.  அவற்றுள் ஒன்று, மன்னர் முடி சூட்டிக்கொள்ளும் விழாவின்போது, அம் முடியினை வேளாளர் தம் மலர்க் கையால் எடுத்துக் கொடுத்த பின்னரே மன்னர் அதனைச் சூட்டிக்கொள்ளுதல் ஆகும்.  மன்னர்க்கு முடிசூட்ட வல்ல அத்தகைய பெருமைக் குரியவர்கள் வேளாளர்கள் என்பதைக் கம்பர் நன்கு உணர்ந்து, இராமனது முடிசூட்டு விழாவில் எடுத்து விளக்கியுள்ளார்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைகவிழ்க்க இருவரும் கவரிவீச
விரைசெறி குழலிஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்
                                           ( மௌலி 

என்று பாடி இருக்கின்றனர்.  இதனால் “முடிதொட்டுக் கொடுத்தருள் மலர்க்கை” என்றனர்.

    சேக்கிழார் பெருமானார், ஈண்டுப் பானு என்று போற்றப்படுகின்றார்.  பானு (சூரியன்) உலகில் உள்ள புற இருளைப் போக்கவல்லவன்.  சேக்கிழார் பெருமானார் மக்களுக்குள்ள அக இருளாம் அஞ்ஞானத்தைப் போக்கவல்ல ஞான சூரியர்.  ஆதலின் அவரை, “குன்றையாம் குன்று உதித்தெழு பானு” என்றனர்.  இப்பண்பு இவர்பால் முற்றிலும் அமைந்திருத்தலை, இவர் பெரிய புராணம் பாடித் தந்தது