New Page 1
[அ. சொ.] கார்க்
கோலமாலோன்-மேகம் போன்றகரு நிறம் கொண்டு அழகுடன் திகழும் திருமால், புரந்தருள்வன்-காப்பாற்றுவான்,
முகமன்-உபசாரம் மொழி (உண்மையன்று) வேளாண்மையை-உபகாரமாம் தன்மையை, அபிதானம்-பெயர்.
இயம்ப-கூற, மறையோர்-வேதங்களை ஓதுபவர். புகல்-சொல்லப்படும், மூவர்-அனுலோபர், பிரதி லோபர்,
சங்கரர், இலேகர்-தேவர், புகன்று-கூறி, வார்-கச்சு அணிந்த, கோலம்-அழகு வாய்ந்த, மங்கை-உமா
தேவியார், பங்கர்-தம் உடலில் பாதி கொண்ட இறைவர், தளி-கோயில், பொலிய-விளங்க, அளவா-அளவிட்டுச்
சொல்லி முடியாத, மேழி-ஏர், தார்க்கோல்-எருதுகளை ஓட்டக் கையில் கொண்ட சிறு கோல்,
(முன்னே கூறிய முள் போன்ற ஆணி அமைந்திருப்பது) பூசை நித்திய பூசையையும்,சிறப்பு அவ்வக்கலத்துத்
திருவிழாவையும் உணர்த்தும்.
விளக்கம் : திருமாலின்
நிறம் வெண்மையே. திருப்பாற்கடலைக் கடைந்தபோது எழுந்தவிடத்தால் திருமால் நிறம்
கருமையாயிற்று. விடவேகத்தால் வெண்ணிறம் கருநிறமாயிற்று என்பதை அப்பர்,
பருவரை ஒன்றுசுற்றி
அரவங்கை விட்ட
இமையோர் இரிந்து
பயமாய்
திருநெடுமால் நிறத்தை
அடுவான் விசும்பு
சுடுவான் எழுந்த
இசைபோய்
பெருகிடம் மற்றிதற்கோர்
பிதிகாரம் ஒன்றை
அருளாய்
பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை
எரியாமல் உண்டவன்
அண்டர் அண்டர்
அரசே
என்று பாடியுள்ளதைக் காண்க.
வேளாண்மை என்னும்
சொல் உபகாரம்செய்தல் என்ற பொருளைத் தருவது. இப்பொருள் இதற்கு ஆதலை,
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு”
என்ற குறளில் காணலாம்,
|