New Page 1
வேளாளர்கள் சிறந்த
உபகாரிகள் என்பதை ஒளவை மூதாட்டியாரும் கூறியுள்ளதைச் சான்றாகக் காட்டலாம். அது,
நூல் எனிலோ
கோல்சாயும் நும்தமரேல் வெஞ்சமராம்
கோல்எனிலோ ஆங்கே
குடிசாயும்-நாலாவான்
மந்திரியும் ஆவான்
வழிக்குத் துணை ஆவான்
அந்த அரசே அரசு
என்பது,
இந்த உபகாரச் சிந்தனை
வேளாளர்கட்கு இருத்தலின், “அவர்கள் வேளாளர், வேளாண்மை புரிபவர், என்று தொன்று தொட்டு
கூறப்பட்டுவருகின்றனர். இதற்குச் சான்றாகக் கம்பன் “எந்நாளும் காப்பார் வேளாளர்காண்” என்று
கூறியதைக் காண்க. இப்படி இருக்கத் திருமால் உலகைக் காக்கின்றனர் எனல் உபசாரமே அன்றி உண்மை
இல்லை என்பார், “மாலோன் புரந்தருளுவன் எனும் மொழிமுகமன்” என்றனர். வேளாளர்களே அந்தணர்,
அரசர், வணிகர் ஆகிய மூவினத்தாருக்கும் உணவளித்து உபசரிக்கும் பெருஞ்சிறப்பினர். என்பதை
இப்பாடல் அறிவித்து நிற்கின்றது. ஆம், உண்மையில் வேளாளர்களால்தான் மேலே குறிப்பிடப்பட்ட
மூவினத்தாரும், ஏனையோரும் உண்டுகளித்து வாழ்கின்றனர். இந்த உண்மை,
செகதலந்தனில்
அரசர்மனு நீதிமுறையும்
செய்யவேதியர்
தர்மமும்
சித்தஒரு மைத்தவமும்
முத்திநிலையும்
புகழ்சிறந்த
தேவதை மகிமையும்
சுகவனிதை மேலின்பமயல்
கொள்வதும்
பொருள்சுருதி
யோடுபல காவியம்
சொல்கல்வியும்
கருணையும் இல்அறமும்
திவ்வியசுந்தர
விலாச எழிலும்
அகமகிழ்ந்திடு செல்வமும்
பரிவு தாரமும்
அதிககுல மேன்மை
வளமும்
அடையலரை வெல்வதும்கீர்த்திப்
பிரதாபமும்
அஞ்செழுத் துணர்வு
நிலையும்
|