பக்கம் எண் :

கூற

 

சப்பாணிப் பருவம்

373

    கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
    வேறு கிளக்கின் விகற்பம் கற்பம்
    குரோதம் மோகம் கொலைஅஞர் மதம்நகை
    விராய்எண் குணம்ஆ ணவம்என விளம்பினை

    அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
    பைசால சூனியம் மாச்சரி யம்பயம்
    ஆஏழ் குணனும் மாயைக் கருளினை

    இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
    விடுத்தலும் பரநிந்தை மேவல்என் றெடுத்த
    அறுவகைக் குணனும் கருமத் தருளினை

என்று கூறுகிறது.

    மாயேயம் என்பது மாயையின் காரியமே ஆகும்.  தீரோதானம் என்பது மறைப்பு ;  மும்மலங்களையும் தொழில்படுத்தும் சக்தி வாய்ந்தது.  இவ்வைந்தின் குணங்களைச் சிவஞான சித்தியார், மேலும் தெளிவுபடுத்தும் முறையில்,

        மும்மலம் நெல்லி னுக்கு
            முளையொடு தவிடு மிப்போல்
        மம்மர்செய் தணுவின் உண்மை
            வடிவினை மறைத்து நின்று
        பொய்ம்மைசெய் போக பந்த      
            போத்திருத் துவங்கள் பண்னும்
        இம்லம் மூன்றி னோடும்
            இருமலம் இசைப்பன் இன்னும்

        மாயையின் காரியத்தை
            மாயேய மலம தென்றும்
        ஏயும்மும் மலங்கள் தந்தம்
            தொழிலினை இயற்ற ஏவும்
        தூயவன் தனதோர் சத்தி
            திரோதான கரிய தென்று
        ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும்
            அணுக்களை அணைந்து நிற்கும்