பக்கம் எண் :

376

       சப்பாணிப் பருவம்

 

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி,
    மாதொரு பாகனார்தாம் வருவார்           ( ஆங்கே

என்று கூறுகிறது.

ஏன் அப்பர் பெருமானார் சூரிய வணக்கத்தினரைக் குறித்து,

    அருக்கன் பாதம் வணங்குவோர் அந்தியில்
    அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ
    இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
    கருத்தினை அறியார் கள்கல் மனத்தவரே

என்றும், அக்கினி வணக்கம் செய்வோரைக் குறித்து, “எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவமாவது உணர்கிலர் என்றும்” கூறி இருப்பது காண்க.

(35)

5.       எண்ணியவை எண்ணிய படிக்கடி யவர்க்கருளும்
             ஈசன்அருளால் அருள்உறா
         ஈனசம யத்தொடக் கெல்லாம் ஒழித்தனம்
             எனக்கைதட் டுதலும்ஓவாத்
         திண்ணிய மலச்செருக் கெல்லாம் ஒழித்தனம்
             தீர்ந்ததவ் வாதைஎன்று
         செப்பிக்கை தட்டுதலும் இந்திரன் மலர்க்கணான்
             தேந்துழா யவன்வாழ்க்கையும்
         நண்ணிய எழும்கருத் தும்தவிர்ந்த தனம்என்று
             நாடிக்கை தட்டுதலும்நேர்
         நவிலநம் பரமகுரு சாமிஎன் றியாவரும்
             நயக்கஅவ தாரம்செய்தாய்
         தண்ணிய மலர்க்கைத் தலம்குவித் தையஒரு
             சப்பாணி கொட்டியருளே
         தண்டமிழ்க் குன்றையாம் குன்றுதித் தெழுபானு
             சப்பாணி கொட்டியருளே

    [அ. சொ.]  ஈன-தாழ்மையான, நீசமான, தொடக்கு-பாச பந்தம், ஓவா-நீங்காத, திண்ணிய-வன்மைமிக்க, மலச்செருக்கு-மும்மலங்களின் மமதை, வாதை-துன்பம், மலர்க்