New Page 1
சேக்கிழார் வாழ்க்கையிலும்,
வாக்கிலும் தெரிய வருகின்றது என்பதற்காகும்.
அநபாய சோழன்
பேர் அரசன். அவன் சீவகசிந்தாமணி என்னும் நூலில் ஈடுபட்டவன். அத்தகையவனுக்குச் சிவனடியார்
வரலாற்றைச் சொல்லி, அவன் மனத்தைத் திருப்பலாமோ திருப்பக்கூடாதோ என்று சிறிதும் தயங்காது
தமது உளக்கருத்தை உரைத்த உரம் பெற்றவர் சேக்கிழார் ஆதலின், “ ஆளி “ என்று ஈண்டுக்
குறிப்பிடப் பட்டார். இலைமலி எனும் கவி,
இலைமலிந்த வேல்நம்பி
எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்தன்
அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி
கண்ணப்பர்க் கடியேன்
கடவூரில்
கலயன்தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல்
மானக்கஞ் ஞாறன்
எஞ்சாத வாள்தாயன்
அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை
ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில்
அம்மானுக் காளே “
என்பது.
எழுபுவனங்கள் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சன லோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்,
இவை மேல் ஏழு லோகங்கள். கீழ் ஏழு லோகங்கள் அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம்,
இரசாதலம், பாதாலம் என்பன. ஏழு முனிவர்கள் மரீசீ, அங்கிரசன், புலகன், வசிட்டன், அத்திரி,
புலஸ்தியன், கிருது ஆவார். ஒரு சிலர், கசியபன், அத்திரி, பரத்துவாசன், விசுவாமித்திரன்,
கௌதமன், ஜமதக்கினி, வசிட்டன் என்பர். அமர்வார் என்பது விரும்புவார் என்னும் பொருள்
தருதலை,
அகன் அமர்ந்து செய்யாள்
உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான்
இல் ‘!
என்ற குறட்பாவில் காண்க.
|