ஒ
ஒருங்கு - முழுமையும்
அனையார் - அத்தகையவறியவர், தண்டல்-தடை-பூப்ப-தோன்ற, கைத்தலம் விரியாது- இல்லை என்னாமல்,
குவி தரும் - அள்ளிக் கொடுக்கும், வறிதாம்கொல் - வீணாகப் போகுமோ, தவம் - போற்றி செய்தல்,
கண்டல் - தாழை, செறிந்த - நிறைந்துள்ள, கடல் வண்ணன் - கடல் நிறம் படைத்த திருமால், கலிகெழு
- ஓசை மிகுந்த, கண்துயில்வது - உறங்குவது, பொர-போல, சுதை-சுண்ணாம்பு, தீற்றிய-பூசப்பெற்ற,
காமரு-அழகிய, கொண்டல் - மேகம்.
விளக்கம் : உலகில்
ஆதுலர்களாகிய ஏழைகள் “ தம் எண்ணத்தில், பட்சணம், உண்ண உணவு இல்லையே, உடுக்க உடையில்லையே
என்ற ஏக்கத்துடன், நற்குணம் வாய்ந்த மனையாளை மணந்து வாழ்வதற்கும் இல்லையே” என்று எண்ணிக்
கொண்டிருப்பர். அங்ஙனம் எண்ணியவர்கள் தம் குறைகளை நீக்குவோரிடத்துச் சென்று கூறி, அக்குறைகளை
நீக்கிக் கொள்வர். உணவு வேண்டி இருந்தமையினை இரங்கேச வெண்பா,
அங்கிஉம்பர்
கோன்கா அருந்த நினைந்தர்ச் சுனன்பால்
இங்கிதமாப் பெற்றான்
இரங்கேசா
என்று கூறுகிறது.
உடை வேண்டி இறைவர்
நேசநாயனாரிடத்தில் இரந்ததை முதுமொழி மேற்வைப்பு என்னும் நூல்,
ஈசன் இரந்தாலும்
ஈந்தாரோ டொத்துயர்ந்தார்
நேசர் இடத்திரந்து
நிற்றலால்
என்று இயம்புகிறது.
மணத்தல் பொருட்டு
வேண்டுதலைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், தருமி என்பான் இறைவனிடத்தில் சென்று,
|