வ
வாரேறும் முலைமடவார்
மருங்கேறும் மலர்க்கணையொண்
பாரேறும் புகழ்உறழ்ந்தைப்
பதியின்வளம் பகர்வரிதால்
என்றும் பாடியுள்ளார்
(38)
8. படியிடை ஒருபை திரவரு
ணனைபுரி
பாவலர் ஐந்திணையும்
பகுத்தொரு
முப்பொரு ளோடும் விரித்துப்
பயனா கத்தெய்வம்
கடிதலில் சினகரம்
உள்ளன ஓதக்
கற்பித்
தவநெஞ்சம்
கனியக் கனியக்
கண்ணீர் வாரக்
கவிபா டியஇறைவ
ஒடிவரி தாம்இரு
பன்னிரு கோட்டத்
துள்ஒரு கோட்டம்அலா
தொருகோட் டமும்உறல்
இல்லாய் நல்லாய்
உலவா வளமைப்பல்
குடிகள் நெருங்கும்
குன்றத் தூரன்
கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர்
காவல நாவல
கொட்டுக சப்பாணி
[ அ. சொ. ]
படியிடை-பூமியில், பைதிரம் - நாடு, ஐந்திணையும் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என்னும் ஐந்து நிலங்களையும், ஒரு-ஒப்பற்ற, முப்பொருள்-முதற் பொருள், கருப் பொருள், உரிப்
பொருள், கடிதல்- நீக்குதல், சினகரம்-கோவில், வார-ஒழுக, இறைவ-தலைவ, ஒடிவு அரிதாம்-தாழ்வு
கூறப்படுதற்கு அரியதாம், அழிவில்லாத, இரு பன்னிருகோட்டம்-இருபத்து நான்கு கோட்டங்கள், ஒரு
கோட்டம்-ஒப்பற்ற புலியூர்க் கோட்டம், அலாது-அல்லாமல், (கோட்டமும் கோணலும், வேறு இல்லை
என்றவாறு) உறல்-பொருத்துதல், உலவா-குறையா.
விளக்கம் : சேக்கிழார்
பெருமானார் தமக்குப் பின்வந்த புலவர்கட்கெல்லாம், ஒரு நாட்டை வர்ணிக்க வேண்டுமாயின், அந்த
நாட்டின் ஐந்திணை வளங்களையும்
|