பக்கம் எண் :

ஒவ

 

       சப்பாணிப் பருவம்

393

ஒவ்வொரு திணைகளுக்குரிய முப்பொருள்களையும், அவ்வத் திணைகட்குரிய கோயில்களையும் பாடுதல் வேண்டும் என்பதைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் விளக்கமுறக் கூறிச் சென்றுள்ளார்.

        கொண்டல் வானத்தின் மணிசொரி
            வனகுல வரைப்பால்
        தண்து ணர்க்கொன்றை பொன்சொரி
            வனதள வயற்பால்
        வண்டல் முத்தம்நீர் மண்டுகால்
            சொரிவன வயற்பால்
        கண்டல் முன்துறைக் கரிசொரி
            வனகலம் கடற்பால்

என்று நான்கு திணைகளையும் கூறி, முல்லையும் குறிஞ்சியும் வெய்யோன் வெப்பத்தால் திரிந்து பாலையாக மாறுதலின் அதனையும் உட்கொண்டு,

    கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்தசில இடங்கள்
    நீல வாள்படை நீலிகோட் டங்களும் நிரந்த
    கால வேனிலில் கடும்பகல் பொழுதினைப் பற்றிப்
    பாலை யும்சொல லாவன உளபரல் முரம்பு

என்று பாலைத் திணையையும், அத்திணைக்குரிய கோயிலையும் கூறியுள்ளார்.  ஏனைய திணைகளுக்குரிய கோயில்களைக் குறிப்பிடும் இடத்து,

    அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
    வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
    உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்
    கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவம்குறை உளதோ

என்று குறிஞ்சி நிலத்துக் கோயிலையும்,

    நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
    மாறில் கங்கைதான் அவர்க்குமஞ் சனந்தர மகிழ்ந்தே
    ஊறுநீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை
    வேறு தன்பெரு வைப்பென விளக்குமா முல்லை