பக்கம் எண் :

என

394

       சப்பாணிப் பருவம்

 

என்று முல்லை நிலத்துக் கோயிலையும், (கலிகைமாநகர்-தக்கோலம் என்னும் திருவூறல் திருக்கோயில்)  

    அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும்
    பருமி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
    மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம்
    பொருவில் கோயிலும் சூழ்ந்த பூம்பணை மருதம்

என்று மருத நிலத்துக் கோயிலையும்,

    மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
    மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப்
    பைத ரும்பணி அணிந்தவர் பதியெனப் பலவால்
    நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ

என்று நெய்தல் நிலத்துக் கோயிலையும் பாடிக் காட்டி இருத்தல் காண்க.  இப்படி ஏனைய புலவர்கள் பாடிக் காட்டுவர்.  இவ்வைந்திணைகட்குரிய முப்பொருள்கள் ஆவன முதற் பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்பன.  இவை இன்னின்ன என முன்பே விளக்கப் பட்டன.  விளக்கத்தினை ஆண்டுக் காணவும்.

    “அங்கண் முல்லையின் தெய்வம்என்று அருந்தமிழ்
                                           ( உரைக்கும்
     செங்கண்மால்”

என முதற் பொருளையும்,

“வியல்அளக்கரில் விடும்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
 கயல்அளப்பன பரத்தையர் கருநெடுங் கண்கள்”

எனக் கருப் பொருளையும்,

        மென்பூஞ் சயனத் திடைத்துயிலும்
            மேவார் விழித்தும் இனிதமரர்
        பொன்பூந் தவிசின் மிசையினிரார்
            நில்லார் செல்லார் புறம்பொழியார்
        மன்பூ வாளி மழைகழியார்
            மறவார் நினையார் வாய்விள்ளார்
        எண்பூ டுருக்கும் புலவியோ
            பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்