என உர
என உரிப் பொருள்களையும்
பாடிக் காட்டினர். இவையனைத்தையும் நம்மனோர் அறிய ஆசிரியர் ஈண்டு “படியிடை** கற்பித்தவ”
ரென்று சுட்டிக் காட்டினர்.
சேக்கிழார்
பெருமானார் கண்ணீர் வடிய வடியக் கவி பாடவல்லார் என்பதை,
“களியா னையின்ஈர்
உரியாய் சிவதா
எளியார் வலியாம்
இறைவா சிவதா
அளியார் அடியார்
அறிவே சிவதா
தெளிவார் அமுதே
சிவதா சிவதா”
என்றும்,
தஞ்சே சரணம்
புகுதும் தமியோர்
நெஞ்சேய் துயரம்
கெடநேர் தொடரும்
மஞ்சே எனவீழ்
மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய்
சிவதா சிவதா
என்றும்,
அடியாராம் இமையவர்தம்
கூட்டம் உய்ய
அலைகடல்வாய்
நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியாலும் நான்முகனும்
காணாக் கோல
நீலவிட அரவணிந்த
நிமலா வெந்து
பொடியான காமனுயிர்
இரதி வேண்டப்
புரிந்தளித்த
புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை
மருங்கு சூழும்
கவின்மருகல்
பெருமானே காவாய் என்றும்.
வந்தடைந்த சிறுமறையோன்
உயிர்மேல் சீறி
வருங்காலன்
பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண்
வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள
உதைத்தருளும் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம்
நீங்கு மாறும்
யான்இடுக்கண்
குழிநின்றும் ஏறு மாறும்
அந்திமதிக் குழவிவளர்
செய்ய வேணி
அணிமருகல்
பெருமானே அருளாய் என்றும்
பாடுமாற்றால் அறியலாம்.
இருபத்துநான்கு கோட்டங்கள்,
புழல் கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவூர்க்கோட்டம், செங்காட்டுக்
|