9
9. நாடிய விரிநூல்
சொற்றிடும் திறனால்
நல்நூல் ஆசிரியன்
நகுபா சுரம்முதல்
உரைசெய் தலினால்
நவில்உரை ஆசிரியன்
நீடிய பரசம யக்குழி
வீழ்ந்தவர்
நீப்பப் ரேபதனைசெய்
நிலையால் போத
காசிரி யன்இவை
நிகழ்தொறும்
நிகழ்தோறும்
ஆடிய ஞானத் திறன்உற
லால்ஞா
னாசிரி யனும்நீஎன்
றான்றோர்
பலரும் புகழப் பாடுபவ
அகிலம் எலாம்சென்று
கூடிய புகழ்சால்
குன்றத் தூரன்
கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர்
காவல நாவல
கொட்டுக சப்பாணி
[அ. சொ.]
நாடிய-தேடிய, சொற்றிடும்-பாடிடும் திறன்-வன்மை, நகு-விளங்கும், பாசுரம் திருஞான சம்பத்தரது
பாசுரப் பதிகம், நவில்-கூறப்படும், நீப்ப-நீங்க, ஆன்றோர்-பெரியோர், அகிலம்-உலகம்,
சால்-மிகுந்த.
விளக்கம் : பெரிய
புராணத்திற்குப் பெருந் துணை செய்த நூல்கள் தேவாரமும் ஏனைதிரு முறைகளும், கல்வெட்டுக்களும், செப்புப்
பட்டயங்களும் வரலாறுகளும் ஏனைய துணைக் கருவிகளும் என்றாலும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய்
மலர்ந்த திருத்தொண்டத் தொகையும் நம்பியாண்டார் நம்பிகள் செய்தருளிய திருத்தொண்டர் திருவந்தாதியுமே
அடிப்படை நூல்களாகும், இதனை நம் சேக்கிழார் பெருமானாரே,
மற்றி தற்குப் பதிகம்வன்
தொண்டர்தாம்
புற்றி டத்தெம்
புராணர் அருளினால்
|