பக்கம் எண் :

New Page 1

398

       சப்பாணிப் பருவம்

 

    சொற்ற மெய்த்திருத் தொண்டர் தொகைஎனப்
    பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்

    அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
    நந்த நாதனும் நம்பிஆண் டார்நம்பி
    புந்தி ஆரப் புகன்ற வகையினால்
    வந்த வாறு வாழாமல் இயம்புவாம்

என்று குறிப்பிட்டுள்ளார்.  இங்ஙனம் குறிப்பிட்டதனால் திருத் தொண்டத் தொகை, தொகை நூலாகவும், திருத்தொண்டர் திருவந்தாதி வகை நூலாகவும், பெரிய புராணம் விரி நூலாகவும் அமைதலைக் காணலாம்.  இம்முறையில் நூல்கள் செய்யப்படுதலைத் தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழி பெயர்த்து அதர்ப்படயாத்தலோடு அனைமரபினவே” எனத் தொல்காப்பியச் சூத்திரத்தாலும் தெளியலாம்.  எனவே, பெரிய புராணம் விரி நூல்வகையைச் சார்ந்ததாயிற்று.  இவ்வாறு சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடியதால் இவர் சிறந்த விரி நூல் செய்த நன்னூலாசிரியர் ஆயினர்.

    பெரிய புராணத்துள் பயிரப் பகுதியும், பதின்மூன்று சருக்கங்களும், இச்சருக்கங்களில் அடங்கிய அறுபத்துமூன்று தனி அடியார்களின் புராணங்களும், ஒன்பது தொகை அடியார்களின் புராணங்களும் திருக் கூட்டச் சிறப்பு, திருநகரச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருமலைச் சிறப்பு ஆகியவைகளும் இவற்றிற்குரிய நாலாயிரத்து இருநூற்று எண்பத்தாறு பாடல்களும் இருத்தலின் இது விரிநூல்தானே?

    சேக்கிழார் பெருமானார் விரிநூல் செய்ததை வியந்து உமாபதி சிவாசாரியரும்,

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
    தொல்லையதாம் திருத்தொண்டர் தொகையடியார்
                                        பதம்போற்றி
    ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
    செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடிபோற்றி

என்று பாடிப் பரவினர்.