| 
New Page 1
 
“சேக்கிழார் நற்றமிழ்க்கவி 
தழையவே,” எனச் செயப்படு பொருள் அமைந்திருத்தலையும் காண்க. 
    தில்லைப் பொன்அம்பலம் 
பொன்னால் வேயப்பட்டிருப்பதை நாம் இன்றும் காண்கின்றோம்.  இப்பணியைச் செய்த பெருமை சோழர்கட்கே 
உரியது.  அங்ஙனம் வேய்ந்த பொன் ஓடுகளில் நமசிவாய என்னும் மந்திரம் பொறிக்கப்பட்டிருந்ததையும் 
அறிகிறோம்.  விஜயாலயன் மகன் ஆதித்த சோழன் தில்லைச்சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன் 
வேய்ந்தான்.  முதல் குலோத்துங்கன் மகன் விக்ரம சோழன் தில்லைச் சிற்றம்பலம் சூழ்ந்த திருச்சுற்று 
மாளிகை, கோபுரவாயில் இவற்றிற்குப் பொன் வேய்ந்தான்.  இவனுடைய மகன் இரண்டாம் குலோத்துங்கன் 
பேரம்பலம் பொன் வேய்ந்தான்.   இதனால் அவன் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் எனப்பட்டான்.  
இந்த உண்மையினைக் கீழ்வரும் நம்பியாண்டார் உரைகளால் உணர்ந்து கொள்ளலாம். 
  
 
 “ சிங்கத் 
துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு 
    கொங்கில் கனகம் அணிந்த ஆதித்தன் “ 
    “ செம்பொன் 
அணிந்து சிற்றம்பலத்தை “ 
 
  இதனைப்பல் 
கல்வெட்டு வாயிலாகவும் உறுதிப்படுத்தலாம்.  இதனையே ஈண்டு  “ ஏம்மேவும் ஞானசபை “ என்று 
குறிக்கப்பட்டது. 
    சேக்கிழார், 
திருத்தொண்டர் வரலாற்றைப் பாடுதற்கு இறைவர் திருமுன் நின்று வேண்டியபோது, கூத்தப்பிரான் “ உலகெலாம் “ என்னும் 
முதலை எடுத்துத்தர, அதனையே தம் நூலின் முதல் பாட்டிற்கு முதலாக எடுத்துக்கொண்டு சேக்கிழார் 
பாடினார்.  “ இறைவர்தம் மேனி “  என்றது அசரீரி.  இவ்வாறு இறைவர் தமக்கு முதல் எடுத்து 
மொழிந்ததைக் குன்றைக் கோமகனார். 
    அருளின் நீர்மைத் 
திருத்தொண் டறிவரும் 
    தெருளின் நீர்இது 
செப்புதற் காம்எனில் 
    வெருளின் மெய்ம்மொழி 
வான்நிழல் கூறிய 
    பொருளின் ஆகும் எனப்புகழ் வாம்அரோ. 
 |