| 
இ
 
இருபத்துமூன்று பாடல்களைத் 
தாம் பாடி விளக்கம் உணர்த்தியுள்ளார்.  அவ்வுரை விளக்கம் திரு ஞான சம்பந்தரது உள்ளக் 
குறிப்பை அறிந்து உரைக்கப் பட்டது. அங்ஙனம் இருந்தும் சேக்கிழார் தம் அடக்கப் பண்புக்கு ஏற்ப, 
வெறியார் பொழில்சண் 
பையர் வேந்தர் மெய்ப்பா  
                                    சுரத்தைக் 
குறிஏ றியஎல்லை அறிந்துகும் 
பிட்டேன் அல்லேன் 
சிறியேன் அறிவுக் கவர்தம்திருப் 
பாதம் தந்த 
நெறியே சிறிதியான் 
அறிநீர்மைகும் பிட்டேன் அன்பால் 
என்ற அருளிச் செய்வாரானால், 
அவர் தம் பெருமையினை எவ்வாறு எடுத்து இயம்புவது !  
    சேக்கிழார் 
பெருமானார் வாக்கில் கருத்தில் ஞானத்திறன் மிகுதியாக உண்டு.  “அருமறை முதலில் நடுவினில் 
கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம்” என்ற இடத்து 
இவரது வேதாகம சாஸ்திர ஞானக் குறிப்பும், 
முந்தை மறைநூல் மரபின் 
மொழிந்தமுறை எழுந்துவேய் 
அந்தமுதல் நாலிரண்டில் 
அரிந்துநரப் புறுதானம் 
வந்ததுளை நிரைஆக்கி 
வாயமுதல் வழங்குதுளை 
அந்தமில்சீர் இடையீட்டின் 
அங்குலிஎண் களின் அமைத்து 
என்ற இடத்து இவர் தம் 
இசை ஞானத்தையும், 
அருக்கன்முதல் கோளனைத்தும் 
அழகியஉச் சங்களிலே 
பெருக்கவலி யுடன்நிற்கப் 
பேணியநல் ஓரைஎழத் 
திருக்கிளரும் ஆதிரைநாள் 
திசைவிளங்கப் பரசமயத் 
தருக்கொழியச் சைவமுதல் 
வைதிகமும் தழைத்தோங்க 
என்று பாடிய இடத்து இன்னார்தம் 
ஜோதிட நூல் ஞானத்தையும், 
    இருநிலத்தின் 
மீசைதோய்ந்த எழுதரிய திருவடியும் 
    திருவடியில் திருப்பஞ்ச 
முத்திரையும் திகழ்ந்திலங்க 
26  
 |