த
திருப்பனந்தாள்
சிவலிங்கம் சாய்ந்து இருந்தபோது அதனை நிமிர்த்த, யானை கட்டி முயன்றபோது அது நிமிரா நிலையில்
கலயர் சென்று கயிற்றைத் தம் கழுத்தில் பூட்டி இழுத்தபோது சிவலிங்கம் நிமிர்ந்தது.
மானக்கஞ் சாறநாயனார்
கஞ்சாறு ஊரினர்; வேளாளர். சிவபெருமான் மாவிரதர்தம் கோலத்தோடு வந்து நாயனார் மகள் கூந்தலைக்
கேட்டனர். அப்படியே அம்மகளார் கூந்தலை அறுத்துக் கொடுத்தவர். இறைவர் அவர்க்குத் திருவருள்
புரிந்து மறைந்தார். கூந்தலும் வளர்ந்து விட்டது.
அரிவாள் தாயர்
என்பவர் சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் ஊரினர்; வேளாளர். இவரது பெயர் தாயர் என்பது.
மாவடு, செங்கீரை, செந்நெல் அரிசி இவற்றைச் சிவபெருமானுக்கு அமுது செய்து வந்தவர். வறுமையுற்ற
நிலையிலும் இத் தொண்டை நிறுத்தாது செய்து வந்தார். ஒரு நாள் சிவனார்க்குரிய அமுதுப்
பொருள்களை எடுத்துச் சென்றபோது உணவு இன்றி இளைத்த காரணத்தால் இடறிக் கீழே விழ, அங்கிருந்த
வெடிப்பில் அரிசி, கீரை, மாவடு சிந்திப் போயின. உடனே அடியார் தம் கழுத்துக் குரல்வளையை
அறுத்துக்கொள்ள முயன்றார். இறைவர் அவர்தம் அமுதை ஏற்றாற்போல் மாவடுவை விடேல் விடேல்
என்று கடித்து ஓசை காட்டி ஊட்டியை அறுக்கொன்ணவாறு செய்து அருள் புரிந்தார்.
ஆனாயர் மழ நாட்டில்
திருமங்கலம் என்னும் பதியில் இடையர் குடும்பத்தில் தோன்றினார். ஆடு மாடுகளைக் காட்டகம்
அழைத்துச் சென்று, புல் ஆர்த்திப் புனல் ஊட்டி வந்தார். ஓய்ந்த நேரங்களில் புல்லாங் குழலில்
ஐந்தெழுத்தை இசைத்து இறைவரை உருகுமாறு செய்தார். இறைவர் இவர் முன் தோன்றித் திருவருள் புரிந்தார்.
எழுபவம் தேவர்,
மக்கள், விலங்கு, பறவை, நீர் வாழ்வன, ஊர்வன, தாவரம் என்பன. அடியார்கட்கு எப்பிறவியும்
இல்லை ஆதலின், “எழுபவம் மாய்த்த எழுவர்”
|