| 
5
 
5.    நிலஞ்சார் தெய்வக்
கற்பகமே 
          நிமல ஞான
வாரிதியே 
      நீடுஞ் சைவப்
பெருவாழ்வே 
          நிலவா நின்ற
குணக்குன்றே 
      வலஞ்சார் பெருநா
வலரேறே 
          மாறா அருட்சிந்
தாமணியே 
      மதிப்பார் மதியுன்
எழுஞ்சுடரே 
          வாழ்த்து
வார்தம் பெரும்பேறே 
      புலஞ்சார் பத்தி
விளைநிலமே 
          போக்கு வரவில்
பூரணமே 
      புந்திக்
கினிக்குஞ் சுவையமுதே 
          போற்றி இனிமேல்
ஒருதாயர் 
      கலஞ்சார் முலைப்பால்
அருந்தாத 
          கனிவாய் முத்தந்
தருகவே 
      கனகக் குன்றை
யனகசெழுங் 
          கனிவாய் முத்தந்
தருகவே. 
     [அ, சொ.] 
 சார்-அடைந்த, நிமல-குற்றம் அற்ற, ஞானவாரிதியே-அறிவுக் கடலே, நிலவா - விளங்கி, வலம்-வெற்றி,
ஏறே-தலைவரே,மாறா-தவறாமல், மதிப்பார்-போற்றுபவர், மதியுள்-அறிவில், பூரணமே-நிறைவே,
போக்கு-இறப்பு, வரவு-பிறப்பு, புந்திக்கு-அறிவுக்கு, கலம் சார்-செப்புக் குடம் போன்ற, 
     விளக்கம்: 
ஆசிரியர் ஈண்டுச் சேக்கிழார் பெருமானாரை “கற்பகமே, வாரிதியே, பெருவாழ்வே, குணக்குன்றே, நாவலர்
ஏறே, சிந்தாமணிச் சுடரே, பெரும்பேறே, பத்திவிளைநிலமே, பூரணமே, அமுதே” என்று வாயாரப்
போற்றிப் புகழ்கின்றார். 
    கற்பகம் என்பது தேவலோகப்
பஞ்ச விருட்சங்களுள் ஒன்று.  பஞ்ச விருட்சங்கள் அரிச்சந்தானம், கற்பகம், சந்தானம்,
பாரிசாதம், மந்தாரம் என்பன. தன்னைச் 
 |