பக்கம் எண் :

 

454

       முத்தப் பருவம்

நீதியினால் இவைஎல்லாம் ஓரிடத்தே காண
    நின்றதுயா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே
    அடங்கியடும் அவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்

என்று சிவஞான சித்தியார் வாக்கையும் ஈண்டு உணர்க, நீடும் சைவம் என்றது நீண்ட காலமாக இருந்து வரும் பழைய சமயம் என்ற பொருளும் தரும்,  Sir John Marshal  என்பார்  Saivisim is the most ancient living religion in the world  என்றும், சித்தாந்த தீபிகா என்னும் பத்திரிகை இங்கிலாந்து சைவ சமய நகரமாகவே தோற்றம் அளிக்கிறது என்பதை  It is impossible to think of England as anything else except a Saivaite country  என்றும் கூறுவதால் நீடும் என்னும் சொல் எங்கும் நீண்டு விளங்கும் என்ற பொருளும் தருதலை அறியலாம்.

    சேக்கிழார் பெருமானார் பல நற்குணங்கட்கு உறைவிடம்.  அவற்றுள் சிறப்பாக அவரது பணிவு அடக்கம் முதலான பண்புகளை எடுத்துக் காட்டலாம்.  சுந்தரரைப் பற்றிக் கூறுமிடத்து,

        உலகுய்ய ஆண்டு கொள்ளப்
            பெற்றவர் பாதம் உன்னித்
        தலைமிசை வைத்து வாழும்
            தலைமைநம் தலைமை யாகும்

என்றும், கண்ணப்பரைக் கழற வந்த இடத்து “நம் பெருமான் செய்தபணி நாம்தெரிந்த வாறுரைப்பாம்” என்றும், மானக்கஞ்சாறரைப் பற்றிப் பேச வந்த இடத்து,

பான்மைத்திண் கலய னாரைப் பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்

என்றும் பாடித் தம் பணிவுடைமையினைக் காட்டியுள்ளமையின், “நிலவா நின்ற குணக்குன்றே” எனப்பட்டார்.

    சேக்கிழார் மிக்க நாவன்மை படைத்தவர் என்பதை அவர் பாடியுள்ள பெரிய புராணமே சான்றாக நின்று காட்ட