பக்கம் எண் :

46

             காப்புப் பருவம்

    சிலப்பதிகாரம், “குலத்தில் குன்றாக் கொழுங்குடி” என்கிறது.  வினாயக புராணம், “கொடுப்பதும் குறைவின்றிக் கொள்வது மிகையின்றி வணிகர்கள் மற்று அறியார்” என்கிறது.  வள்ளுவர் வணிகர்களுக்குக் கூறும் அறவுரை.

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்”

என்பது.

    இப்பண்புகளை மேற்கொண்டவர் வணிகர் என்பார், “செம்மைபெறும் மும்மையாம் வருணம்” என்றார்.  “மும்மையால் உலகாண்ட மூர்த்தி” எனச் சுந்தரர் மூர்த்தியாரைப் போற்றுகின்றார்.  இவரைச் சேக்கிழார் பாடும்பொழுது,

நாளும்பெரும் காதல் நயப்புறும் வேட்கை யாலே
கேளும் துணையும் முதற்கேடில் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான்அடித் தாமரை அவ்ல தில்லார்
மூளும்பெரு கன்பெனும் மூர்த்தியார் மூர்த்தி யார்தாம்

என்று குறிப்பி்ட்டுள்ளார்.  மேலும் இவர் அரசாண்ட சிறப்பைக் கூறும்போது,

    பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
    ஏதம்பிணி யாவகை இவ்வுல காண்டு தொண்டின்
    பேதம்புரி யாஅருள் பேரர சாளப் பெற்று
    நாதன்கழல் சேவடி நண்ணினர் அண்ண லாரே

என்றும் பாடிக் காட்டினர். இன்னோரன்ன காரணங் கொண்டே “சிறந்து ஓங்கும் மூர்த்தியார்” என்ற அடை கொடுத்து ஓதினார்.  சிறந்து ஓங்கு என்னும் தொடரை அறுவருக்கும் இயைத்துப் பொருள் கொள்ளினும் கொள்க.  “இருமும்மையார்”முன் கூறப்பட்ட அறுவர்.

    மூர்த்தியார் மதுரையில் வணிகர் மரபில் உதித்தவர்.  அன்பே வடிவானவர்.  சொக்கலிங்கப் பெருமானுக்குச் சந்தனம் அரைத்துச் சாத்தும் தொண்டை மேற்கொண்டவர்.  பாண்டியநாடு சமணமதத்தவனான மன்னன் ஆட்சிக்