| 
7
 
7.     மேயபல ஆரியர்
குழாத்தினுள் பூரியர் 
           விராயதென
வாய தூய 
       வெள்ளோதி மக்குழாம்
நிலைகுலைய மேதிகால் 
           விசைத்தெழீஇப்
பாய ஆங்கண் 
       ஆயவெடி வாளையேர்
பருகிலாங் கலிமோத 
           அதின்உதிர்
பழத்தின் வெருவி 
       அம்மேதி கரையேற
அதுகண்ட அவ்வாளை 
           ஆயவா லாமை
தீரத் 
       தூயநெடு வான்நீர்
துளைந்தாடி மீளின் 
           தொடக்குநீங்
காமை யெண்ணிச் 
       சோதிமதி மண்டலங்
கீண்டமுத தாரையொடூ 
           துனையக் கிழக்கி
றங்கும் 
       பாயதடம் மலியும்
திருத்தொண்டை நன்னாட 
           பவளவாய் முத்தம்
அருளே 
       பரவுசீ ருலகெலாம்
விரவுசே வையர்பிரான்  
           பவளவாய் முத்தம்
அருளே. 
     [ அ. சொ. ] ஆரியர்-மேலோர்,
பூசிக்கத்தக்கவர், அறிவுடைய ஆசிரியர்கள், குழாத்தினுள்-கூட்டத்துள், பூரியர்-அற்பர் அறிவீனர்,
விராயது-கலந்திருத்தல், தூய்-சுத்தமான், ஓதிமம்-அன்னம், குழாம்-கூட்டம், மேதி-எருமைகள். 
விசைத்து-வேகமாக நடந்து, அங்கண்-அவ்விடத்தில், ஆய-இருந்த, வெடி-அச்சமுற்ற, வாளை-வாளை மீன்கள்,
ஏர்பு-எழுந்து, இலாங்கலி-தென்னை மரத்தில், வெருவி-பயந்து, ஆய-உண்டான, வாலாமை-தீட்டு, வான்நீர்-கங்கையாற்று
நீரில், துளைந்தாடி-படிந்து மூழ்கி, தொடக்கு-தட்டு, மதி-சந்திரன், கீண்டு-கிழத்து, தாரை-ஒழுக்கு,
துனைய-விரைய, கிழக்கு-கீழே, பாய-பரந்த, தடம்-குளங்கள், மலியும்-மிகும். 
     விளக்கம் : இப்பாடலும்
திருத்தொண்டை நன்னாட்டின் நீர்வளத்தை மிகுதிப்படுத்திக் காட்டுவதாகும்.  குளங்களில் உள்ள
அன்னங்கட்கு இடையே எருமைகள் இருத்தல் 
 |