9
9. வீங்குகரு மேதிபிணர்
படுதட மருப்பினால்
விடுபடாக்
கடுவேலி வாய்:
வடநீக்கி உட்புகூஉம்
மென்கரும் பினைமென்று
மென்றுதின்
றிடவ ழிதரா
ஆங்குநிகழ் சாறப்
படப்பையை நிரப்பிமேல்
அரம்பைஅம் துடவை
மோதி
ஆறாகி நெல்போர்
அடங்கச் சுமந்துசென்
றலைஆழி
யில்க லந்து
தேங்குதிடர் செய்துவரும்
மாற்றிஅம் தமிழ்வாய்ச்
செறிந்துவர
லால்இனி மையாய்த்
திகழ்கின்ற தென்றெண்ணி
ஆடுநர்கள் உண்டுமகிழ்
தேக்கஎன் நாளுஞ்
செயும் :
பாங்குபடு செல்வமென்
பால்தொண்டை நன்னாட
பவளவாய் முத்த
மருளே
பரவுசீர் உலகெலாம்
விரவுசே வையர்பிரான்
பவளவாய் முத்த
மருளே.
[அ. சொ.]
வீங்கு-பருத்த, மேதி-எருமை, பிணர்படு-சமம் அற்ற தன்மை, சுரசுரப்பு, தடமருப்பினால்-வளைந்த
கொம்பினால், வாய்விட-வழிதர, புகூஉ-புகுந்து, வழிதரா வழிந்து ஒழுக, படப்பை-தோட்டம்,
சோலை, அரம்பையம் துடவை-வாழைகள் நிறைந்த அழகிய தோட்டத்தை, ஆழி-கடல், திடர்-மேடு,
உவரும்-உப்புத் தன்மையையும் தமிழ் இனிமை, செறிந்து-நிரம்பி, பாங்கு-நன்மை, மென்பால்-மருத
நிலம்.
விளக்கம் :
எருமைகளின் உடல், பருமனாக இருத்தலின் “வீங்குகரு மேதி” என்றனர். கரும்பின் சாறு ஆறாகப்
பாய்ந்தது என்பது உயர்வு நவிற்சி அணி கருதி என்க. ஆறு தனக்கு எதிரே உள்ள பொருள்களை எல்லாம்
அடித்துப் போதல் இயற்கை ஆதலின், எதிரே இருந்த நெற்கதிர்களை எல்லாம் அடித்துக்கொண்டு
கடலை அணுகியது. ஆண்டு.
|